நடிகர் விஜய்யுடன் மோதுகிறாரா சிம்பு? பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது 'ஈஸ்வரன்'.. பரபரக்கும் தகவல்!
சென்னை: சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன், விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு மோத இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் நடித்து முடித்துள்ள படம், மாஸ்டர். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

அரசு அனுமதி
இதில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தியேட்டர்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

காட்சிகள் ரத்து
ஆனால், கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது. பல பகுதிகளில் தியேட்டர்களை மூடி வருகின்றனர். இந்நிலையில், ஓடிடியில் படங்களை சில தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரி 13 ரிலீஸ்
இந்நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. ஆனால், இதை மாஸ்டர் படக்குழு மறுத்தது. இதையடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஜனவரி 13 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video

பொங்கலுக்கு ஈஸ்வரன்
இந்நிலையில் சிம்பு நடித்துள்ள, ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகப் கூறப்படுகிறது. மாஸ்டர் வெளியான மறுநாள், அதாவது ஜனவரி 14-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழன் பாட்டு
நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பால சரவணன், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இதில் இடம்பெற்றுள்ள தமிழன் பாட்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாகக் கூறப்பட்ட கார்த்தியின் சுல்தான் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.


Click it and Unblock the Notifications











