Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தி ஃபேமிலி மேன் 3ல் விஜய் சேதுபதி நடிக்கிறாரா... தீயாய் பரவும் தகவல்?
சென்னை : நிற்கக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக நடித்துக்கொண்டுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவரது கால்ஷீட்டை எதிர்நோக்கி பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர்.
முதல்வருர் நிவாரண நிதி...ரூ.2 கோடி அளித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ்
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாக இருக்க அதில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள்
தனது எதார்த்த நடிப்பின் மூலம் எல்லா கதாபாத்திரத்தையும் மிகச் சிறப்பாக அனைவரும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக நடித்து முடிக்கக் கூடிய திறமை வாய்ந்த விஜய் சேதுபதி தமிழில் வில்லன், ஹீரோ என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து மாஸ் காட்டி வருகிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெறித்தனத்தின் விளிம்பிற்கே சென்ற இவருக்கு இப்பொழுது பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் குவிகிறது.
இந்தி ரீமேக்
யாதும் ஊரே யாவரும் கேளீர், லாபம், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் என தமிழில் படங்கள் வரிசையாக இருக்கும் அதேசமயம் ஹிந்தியில் ஷாகித் கபூருடன் இணைந்து பிரம்மாண்ட வெப்சீரிஸ், மாநகரம் இந்தி ரீமேக் மற்றும் காந்தி டாக்ஸ் என நிற்கக்கூட நேரமில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.
தி ஃபேமிலி மேன் 2
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் உருவாக்கப்பட்ட விதம் அனைவருக்கும் பிடித்திருந்தாலும் அதில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் உண்மைக்கு மாறான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இருப்பினும் பாலிவுட் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில்
நடிகை சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன் 2ல் நடித்து அறிமுகமானதால் தென்னிந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சமந்தா விடுதலைப் போராளியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளிலும் நடித்து இன்றுவரை கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தி ஃபேமிலி மேன் பாகம் 3 தயாராக உள்ளது எனவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. எனினும் இதுபற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.