வலுக்கும் எதிர்ப்பு.. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகுகிறார் நடிகர் விஜய் சேதுபதி?
சென்னை: முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்தப் படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது..
இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

ஈழத்தமிழர்கள்
அப்போதே, இதற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் அவர், இந்த பயோபிக்கில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

முத்தையா முரளிதரன்
இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது உறுதியானது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார்.

மீண்டும் எதிர்ப்பு
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஷேம்ஆன் விஜய் சேதுபதி
இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷேம் ஆன் விஜய் சேதுபதி (#ShameOnVijaySethupathi) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசியல் கிடையாது
'800 படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம்தான். இதில் எந்தவித அரசியலும் கிடையாது என்றும் படத்தில் ஈழத்தமிழர்களை சிறுமைப்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

விலக இருப்பதாக
இந்நிலையில், எதிர்ப்பு வலுப்பதை அடுத்து, தனக்கு வேண்டியவர்களுடனும் சில இயக்குனர்களுடனும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தப் படத்துக்காக, அவர் வாங்கிய தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











