அம்மாவுடன் மலேசியா புறப்பட்ட விஜய்.. இயக்குநர் ஜேசன் சஞ்சய் ’ஜன நாயகன்’ ஆடியோ லான்ச்க்கு வருவாரா?

சென்னை: ஜன நாயகன் இசை வெளியீட்டிலாவது விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா பங்கேற்பார்களா? என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது. புலி, பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் இசை வெள்யீட்டு விழாவில் சங்கீதா விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது கூட மகன் மற்றும் மகள் அதிகமாக பங்கேற்க மாட்டார்கள்.

விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாமல் மலேசியாவில் நடைபெறவுள்ள நிலையில், இங்கே இருந்து தளபதி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ள பெட்டி படுக்கையுடன் புறப்ப்ட்டு விட்டனர்.

Will Vijay son Jason Sanjay and Sangeetha Vijay attend Jana Nayagan Audio Launch
Photo Credit:

இந்நிலையில், ஒன் லாஸ்ட் டைம் என நடக்கப் போகும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள அவரது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அப்பாவை போலவே டிரெண்டிங்: விஜய்யின் கத்தி படத்தை தயாரித்து தமிழ்நாட்டில் பிரபலமான லைகா தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்மா படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியான டீசர் 10 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளதாக லைகா அறிவித்துள்ளது. அப்பாவை போலவே யூடியூப் டிரெண்டிங்கில் மகன் ஜேசன் சஞ்சய்யும் வந்துவிட்டாரே என்றும் விஜய் ரசிகர்கள் அதிகம் பார்த்ததால் தான் சிக்மா டீசர் டிரெண்டாகி வருகிறது என்றும் கூறுகின்றனர்.

நெல்சன் முதல் அட்லி வரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு வெளியிட்டு பாக்ஸ் ஆபீஸில் ஜன நாயகனுக்கு டஃப் கொடுக்கப் போகும் நெல்சன் முதல் ஆளாக ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ள மலேசியா வந்துவிட்டார். இயக்குநர் அட்லியும் மலேசியாவுக்கு கிளம்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்டோர் மலேசியாவுக்கு பறந்து விட்டார்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மலேசியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைரக்டர் ஜேசன் சஞ்சய் வருவாரா?: தமிழ் சினிமாவின் பல இளம் இயக்குநர்கள் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு படையெடுத்து வரும் நிலையில், தளபதி விஜய்யின் மகனும் சிக்மா படத்தின் டைரக்டருமான ஜேசன் சஞ்சய் மலேசியாவில் நடைபெறும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

அம்மாவுடன் புறப்பட்ட விஜய்: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனது அம்மா ஷோபா சந்திரசேகர் மற்றும் உறவினர்களான பாடகி பல்லவி வினோத் குமார் உள்ளிட்டோருடன் தனி விமானத்தில் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். விஜய்யின் மச்சினிச்சியான பல்லவி வினோத் குமார் அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சங்கீதா விஜய், திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட விஜய் குடும்பத்தினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் தேவையற்ற சர்ச்சைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளியாக அமைந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X