கோட் படத்தில் விஜயகாந்த் இருப்பாரா? பிரேமலதாவின் எச்சரிக்கை யாருக்கு? பிரபலம் சொல்லும் தகவல்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான், இதில் இன்னொரு முக்கிய ஸ்பெஷல் என்றால் மறைந்த நடிகர் விஜயகாந்தை சுமார் 10 நிமிட காட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழு பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியானது. திரைப்படங்களில் கேப்டனை பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழு பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரேமலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.குறிப்பாக இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன.

Vijay vijayakanth GOAT

பிரேமலலிதா அறிக்கை: எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார்.

மரியாதைக்குரியவர்: பிரமலலிதா சொல்வதும் நியாயமானது தான் ஏன் என்றால், விஜயகாந்த் இறந்த பிறகு சினிமாவில் ஆள் ஆளுக்கு என் படத்தில் விஜய்காந்த் வருவார் என்று பேசி வருகின்றனர். விஜய்காந்த் என்பவர் ஒரு மரியாதைக்குரியவர், தனித்துவமானவர் அப்படி இருக்கும் போது, அவரின் பெயருக்கு இழுக்கு வரும் வகையில் அவரின் இமேஜை யாரும் காலி பண்ணிவிடக்கூடாது என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார். அதே நேரம் இதுவரைக்கும் என்னிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என்பது தான் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

சந்தேகத்தில் பேன்ஸ்: குறிப்பாக கோட் படத்தில், விஜயகாந்த் இருப்பாரா என்கிற சந்தேகம் விஜய்காந்த் ரசிகர்களுக்கே ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால், பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கோட் படம் நீங்கலாக என்று பதிவிட்டு இருந்தால், ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்பட்டு இருக்காது . ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இதனால், கோட் படத்தைத்தான் அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு சொல்லப்படுகின்ற காரணத்தை கேட்கும் போது அது அதிர்ச்சி அளிக்கிறது.

விஜய் அரசியல் வருகை: ஒன்று விஜய்யின் அரசியல் வளர்ச்சி பிடிக்கவில்லை என்ற தகவலும், இரண்டாவது விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது விஜய் ஒரு முறைக்கூட வந்து பார்க்கவில்லை. விஜயபிரபாகரன் ஒரு பேட்டியில், நான் விஜய்யை முதல்முறையாக அப்பா இறந்த போது, அவர் ஆறுதல் சொல்ல வந்த போது தான் பார்த்தேன் என்று கூறியிருந்தார். இதை அவர் எதார்த்தமாக சொல்லி இருந்தாலும், விஜய் ஒருமுறைக்கூட அப்பாவை பார்க்க வந்ததே இல்லை என்பதுதான் அர்த்தம். இந்த வருத்தம் அந்த குடும்பத்திற்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரேமலலிதா, வெங்கட்பிரபுவிடம் சில நிபந்தனைகளை விதித்து இருப்பாகவும் சொல்லப்படுகிறது. இதனால்,கோட் படத்தின் இறுதி காப்பிக்காக வெங்கட்பிரபு காத்திருக்கிறார். இதனால், கோட் படத்தில் விஜயகாந்த் வருவாரா மாட்டாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X