இந்தா இவரும் வர்றாராமே.. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்? திடீர் ஆலோசனை?

By

சென்னை: நடிகர் விஷால், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல நடிகர் விஷால், இப்போது ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன் சக்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தல்

இந்தப் படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. இதையடுத்து, துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இதற்கிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால்.

வேட்பு மனு

வேட்பு மனு

இதையடுத்து ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட களமிறங்கினார். இது பரபரப்பான நிலையில் அவர் வேட்பு மனு பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரால் அந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

கருத்து கேட்டுள்ளார்

கருத்து கேட்டுள்ளார்

இந்நிலையில் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவாளர்களுடன் மீண்டும் களம் இறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார், நடிகர் விஷால். தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து கேட்டுள்ளார்.

உறுதியான முடிவு

உறுதியான முடிவு

இதுபற்றி அவர் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, தேர்தல் குறித்து விஷால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X