இந்த வீடியோவை பார்த்துவிட்டு யாஷிகாவின் காதலர் காதலை முறிப்பாரா?
சென்னை: மகத்தின் காதலியை போன்று யாஷிகாவின் காதலரும் காதலை முறிப்பாரா என்று பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத்தும், யாஷிகாவும் காதலிக்கிறார்கள். முதலில் யாஷிகா தனது காதலை சொன்ன போது ஏற்க மறுத்த மகத் பின்னர் ஒப்புக் கொண்டுவிட்டார்.
மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலியும், யாஷிகாவுக்கு ஒரு காதலனும் உள்ள நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த காதலுக்கு என்ன பெயர் சொல்வது என்று தெரியவில்லை.

பிராச்சி
மகத் யாஷிகாவை பார்த்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னதை டிவியில் பார்த்த பிராச்சி மிஸ்ரா அவருடனான காதலை முறித்துக் கொண்டார். பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பது தன் மகத் அல்ல என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள பிராச்சி அவர் பற்றி தன்னிடம் இனி எதுவும் கேட்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் முடிவு நியாயமானது.
காதலன்
பிராச்சியை அடுத்து யாஷிகாவின் காதலனும் தனது காதலை முறித்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காதலில் விழக் கூடாது என்று தான் வந்தேன், ஆனால் வந்த இடத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. காதலை ஷேர் செய்வதில் தவறு இல்லை என்று யாஷிகா பிக் பாஸ் 2 வீட்டில் பேசியதை வெளியே இருக்கும் அவர் காதலரும் பார்த்திருப்பார்.

புகைப்படம்
யாஷிகாவின் காதலன் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த காதலன் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். பிராச்சி போன்று அவரும் சமூக வலைதளத்தில் தனது முடிவை அறிவிப்பாரா இல்லையா என்று தெரியவில்லை.

முகம் சுளிப்பு
மகத், யாஷிகாவின் காதலை பார்த்து பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் முதலில் முகம் சுளித்தனர். பின்னர் இது அவர்களின் வாழ்க்கை, நாம் வந்த வேலையை பார்ப்போம் என்று டாஸ்க் மீது கவனம் செலுத்தத் துவங்கிவிட்டனர். இந்தி பிக் பாஸ் வீட்டில் உருவான காதல் எதுவும் நிலைக்கவில்லை. தமிழில் எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











