twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை: நிறைவேறாத சோக நினைவுகள்

    |

    ரஜினி கமல் என இரண்டு ஆளுமைகளை அறிமுகப்படுத்திய கே. பாலச்சந்தர் தனது சிஷ்யன் ரஜினியிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தார். ஆனால் அவை நிறைவேறும் முன் அவர் மரணத்தை தழுவினார். இன்று அவரது 7 ஆம் ஆண்டு நினைவு தினம்.

    இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று!இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு தினம் இன்று!

    மத்திய தர வர்கத்தின் அடையாளம் பாலச்சந்தர்

    மத்திய தர வர்கத்தின் அடையாளம் பாலச்சந்தர்

    தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி எனும் இரண்டு இமயங்கள், திராவிட கருத்துகள் கொண்ட படங்கள், மறுபுறம் ஏ.பி.நாகராஜன், தேவர் போன்றோர் எடுத்த பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் மத்தியதர வர்க்கத்தை நினைவு கூறும் வகையில் சிறிய நாடக அளவிலான படங்களால் வென்றார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர்.

    நாகேஷை கதாநாயகனாக்கிய துணிச்சல்

    நாகேஷை கதாநாயகனாக்கிய துணிச்சல்

    நாகேஷ் எனும் காமெடி நடிகரை கதாநாயகனாக போட்டு அதுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் போட்டு எடுக்கும் துணிச்சல் யாருக்கு வரும். அதை சாதித்து காட்டியவர் பாலச்சந்தர். அவரது முதல்படமான நீர்குமிழி அதை சாதித்தது. தொடர்ந்து மேஜர் சந்திரகாந்த் படமும் வெற்றி பெற்றது. அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் மறைந்த சோவும் பாலச்சந்தரும் வாடா போடா நண்பர்கள், அதேபோல் நாகேஷ், வாலி, ஜெய்ஷங்கர் போன்றோரும் நெருங்கிய நண்பர்கள்.

    பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பிரபலங்களின் பட்டியல்

    பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பிரபலங்களின் பட்டியல்

    ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை மட்டுமல்ல அவர் அறிமுகப்படுத்திய பிரபலங்கள் பட்டியல் பெரியது. மேஜர் சுந்தர்ராஜன் தொடங்கி, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் , டெல்லி கணேஷ், ராதாரவி, சிவச்சந்திரன், சுஜாதா, ஷோபா , சரத்பாபு, சரிதா, பிரகாஷ்ராஜ், எஸ். வி. சேகர், மௌலி, ஒய். ஜி. மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, திலிப், அனுமந்து என பெரிய பட்டியலே உண்டு. தனது திரைக்கதையால் குடும்பப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய விசுவும் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பே.

    ஜெயலலிதா, எம்ஜிஆர், சிவாஜியும் பாலச்சந்தரும்

    ஜெயலலிதா, எம்ஜிஆர், சிவாஜியும் பாலச்சந்தரும்

    பாலச்சந்தரின் இயக்கத்தில், ஜெயலலிதா நடித்த ஒரே படம் 'மேஜர் சந்திரகாந்த்'. எம்ஜிஆரை இவர் இயக்கியதே இல்லை, ஆனால் தெய்வத்தாய் படத்தின் திரைக்கதை ஆசிரியர் இவர்தான். சிவாஜி கணேசனை வைத்து எதிரொலி படம் இயக்கினார். இஅவரது நூற்றுக்கு நூறு படம் அன்றைய இளைஞர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட படம். அவரது திரைக்கதை, வசனங்கள் நாடக பாணியில் ஒரே இடத்தில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்ட படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன.

    தலைமுறைத்தாண்டி கால் பதித்த இயக்குநர்

    தலைமுறைத்தாண்டி கால் பதித்த இயக்குநர்

    60 களில் கால் பதித்தாலும் தலைமுறைத்தாண்டி 90 களுக்கு பிறகும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பாலச்சந்தர் இந்தி, தெலுங்கிலும் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். டிவி சீரியல்களுக்கு வடிவம் கொடுத்தவர் பாலச்சந்தர்தான். அவரது ரயில் சினேகம், கையளவு மனசு புகழ்பெற்ற சீரியல்கள் ஆகும்.

    சாதனைகளுக்கு சொந்தக்காரர்

    சாதனைகளுக்கு சொந்தக்காரர்

    திரையுலகின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் பாலச்சந்தர், 100 படங்களுக்கு மேல் இயக்கியவர், இந்தி, தெலுங்குப்படங்களும் அதில் அடக்கம், சீரியல்களில் கால் பதித்தவர். பல படங்கள் புதுமை பேசின, அதனால் விருதுகளைப் பெற்றுத்தந்தது. பிலிம்பேர் விருது, தென் இந்திய பிலிம்பேர் விருது என பல விருதுகளை குவித்த அவருக்கு 2010 ஆம் ஆண்டு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

    சீடனிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை

    சீடனிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை

    தான் பலரையும் உருவாக்கினாலும் செருக்கில்லா மனிதராக விளங்கியவர் பாலச்சந்தர். எந்திரன் பட விழாவில் ரஜினியை நேர்க்காணல் செய்தார் பாலச்சந்தர். உன்னை நீ, வா, போன்னு அழைக்கலாமா என அனுமதி பெற்று கேள்விகளை தொடுத்தார். ரஜினி நீ இன்று எட்டாத உயரத்தில் இருக்கிறாய், உன்னை வைத்து நான் இயக்குவது எல்லாம் நடக்காத காரியம் அமிதாப்பச்சனை விட உன் புகழ் அதிகம் என அவர் புகழ்ந்தபோது ஆசிரியரிடம் அடக்கமாக இருக்கும் மாணவராக ரஜினி பணிவாக கேட்டுக்கொண்டார்.

    நீ இயக்கும் படத்தில் என்னை சேர்த்துக்கொள்வாயா?

    நீ இயக்கும் படத்தில் என்னை சேர்த்துக்கொள்வாயா?

    பின்னர் ரஜினியிடம் பாலச்சந்தர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார், படங்களை இயக்கும் எண்ணம் உண்டா என்று கேட்டார். உண்டு என ரஜினி சொன்னபோது "அப்படியானால் என்னை உன் அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ப்வாயா?" எனக்கேட்டார். அசிஸ்ச்டெண்ட் இல்லை என் படத்தில் நீங்கள் இருப்பீர்கள் என ரஜினி பதிலளித்திருப்பார்.

    என் நாடகத்தில் நடிப்பாயா? ரஜினியிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை

    என் நாடகத்தில் நடிப்பாயா? ரஜினியிடம் பாலச்சந்தர் வைத்த கோரிக்கை

    அதேபோல் "நான் அடிப்படையில் நாடகத்திலிருந்து வந்தவன், நான் நாடகம் போட்டால் நீ வந்து நடிப்பாயா" என பாலச்சந்தர் கேட்டபோது கட்டாயம் வருகிறேன் என்று ரஜினி சொன்னார். அவை இரண்டும் நிறைவேறவில்லை. அதற்குள் அவர் காலமாகிவிட்டார். அவரது ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

    English summary
    Will you include me? K. Balachander's request to Rajini
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X