அது சரி, இதுக்கு என்ன செய்யப் போறீங்க உதயநிதி?: அடுத்த பஞ்சாயத்து ரெடி
சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து அடுத்த பஞ்சாயத்து தயாராகிவிட்டது.
உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் மூன்றாம் கலைஞரே என்று அழைக்கிறார்கள். மேலும் அண்மை காலமாக கட்சியின் போஸ்டர்களில் ஸ்டாலின் அருகே உதயநிதி படமும் உள்ளது.
இந்நிலையில் கோவையில் உள்ள திமுக நூலகத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின்
திமுக நூலகத்தில் உதயநிதி புகைப்படம் எதற்கு என்று ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். புகைப்படத்தை அகற்றியாச்சு என்று உதயநிதி பதில் அளித்ததை பார்த்து அந்த நபர் நன்றி தெரிவித்துள்ளார்.
மகன்
உங்கள் புகைப்படத்தை திமுக நூலகத்தில் இருந்து நீக்கியது சரி, அப்படியே இதற்கும் ஏதாவது ஒரு வழி செய்யுங்கள் என்று இன்னொரு பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் ஒரு நெட்டிசன்.
திமுக
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இப்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
கட்சி
இவரே புகைப்படத்தை வைக்கச் சொல்லிவிட்டு இவரே எடுப்பாராம் என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். உதயநிதி தன் புகைப்படத்தை வைக்கச் சொல்லவில்லை, அவர் மீது உள்ள அன்பால் கட்சியினர் வைத்தனர் என்கிறார்கள் திமுகவினர் சிலர்.


Click it and Unblock the Notifications











