Jana Nayagan: விம்பிள்டன் வரை சென்ற விஜய்யின் புகழ்.. அடேங்கப்பா உலகளவில் டிரெண்டாகிடுச்சே!

லண்டன்: ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் (Jannik Sinner), இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை (Carlos Alcaraz) 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தனது முதல் விம்பிள்டன் பட்டத்தையும், நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். இத்தாலி சார்பாக களமிறங்கிய அவருக்கும் அவரது நாட்டிற்கும் கிடைத்த முதல் விம்பிள்டன் கோப்பை இது என்பதால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலைல் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் போஸ்டரைப் போல போஸ்டர் உருவாக்கப்பட்டு, அதை வெளியிட்டுள்ளது விம்பிள்டன் நிர்வாகம் இது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விம்பிள்டன் 2025 இறுதிப் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னர், இந்த வெற்றியின் மூலம் அல்கராஸுக்கு எதிராக ஐந்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக இத்தாலிய வீரராக விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். இந்தப் போட்டி பெற்ற வெற்று மூலம் பிரெஞ்சு ஓபன் 2025 போட்டியில் அல்கராஸிடம் யானிக் சின்னர் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியின் முதல் சுற்றில் மட்டும் அல்கராஸ் 6-4 என ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் அடுத்த மூன்று சுற்றுகளிலும் யானிக் சின்னர் 6- 4 என விரட்டி விட்டுவிட்டார். இவரது ஆட்டத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். இறுதிப் போட்டிகளில் ரோஜர் பெடரர், லிலி காலின்ஸ், ஜான் சீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

wimbledon 2025 Winner poster inspired from Vijay Jana Nayagan movie Goes World Wide Trending
Photo Credit:

ஜன நாயகன்: யானிக் சின்னருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் தமிழ் மக்களை கவர்ந்த வாழ்த்தாக அமைந்திருப்பது, விஜய்யின் ஜன நாயகன் பட போஸ்டரைப் போல வாழ்த்து தெரிவித்துள்ளதுதான். நடிகர் விஜய் தற்போது இயக்குநர் ஹெச். விநோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

தரமான போஸ்டர்: படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படியான போஸ்டர்களில் ஒரு போஸ்டர், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யைப் பார்க்க குவிந்த ரசிகர்களோடு விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அந்த செல்ஃபி போலவே ஜன நாயகன் படத்தின் ஒரு போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அதே போஸ்டர் போல விம்பிள்டன் வென்ற யானிக் சின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது போன்ற போஸ்டரை தயார் செய்து அதை பகிர்ந்துள்ளார்கள்.

wimbledon 2025 Winner poster inspired from Vijay Jana Nayagan movie Goes World Wide Trending
Photo Credit:

விம்பிள்டன் வரை விஜய்: இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், தமிழ் மக்கள் மத்தியிலும் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் விஜய்யின் புகழ் விம்பிள்டன் வரை சென்றுள்ளது என கமெண்ட் அடுத்து வருகிறார்கள். மேலும் சிலரோ, விம்பிள்டன் சோஷியல் மீடியா பேஜ் அட்மின் விஜய் ரசிகரா எனவும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X