வாவ் ஷாருக்கான் வீட்டில் ரசிகர்கள் தங்க ஒரு அரிய வாய்ப்பு.. என்ன செய்யணும் தெரியுமா?
மும்பை: பிரபலங்களை நேரில் காண்பதே ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பெரிய கனவு.
இந்நிலையில், பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் வீட்டில் ஒரு இரவு தங்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது.
Airbnb நிறுவனத்துடன் இணைந்து கொண்டு ஷாருக்கான் மற்றும் கெளரி கான் இந்த அரிய வாய்ப்பை ரசிகர்களுக்கு உருவாக்கி உள்ளனர்.

ஷாருக்கான் வீட்டில் தங்கலாம்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் வீட்டில் ரசிகர்கள் ஒரு இரவு தங்கும் வசதி கொடுக்கப்பட உள்ளது. ஷாருக்கானின் டெல்லி பாஞ்ச்சீல் பார்க் அருகே உள்ள வீட்டை அவரது மனைவி கெளரி கான் தனது கை வண்ணத்தால் ஒவ்வொரு இடத்தையும் செதுக்கி உள்ளார். அந்த வீட்டில் தங்க தான் ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது திறந்துள்ளது.

சுற்றுலா நிறுவனத்துடன்
Airbnb எனும் ஹோட்டல் அறைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரும் சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து இந்த விஷயத்தை ஷாருக்கான் செய்ய உள்ளார். அது தொடர்பான அறிவிப்புகள் ஷாருக்கானின் இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும், கெளரி கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

காதலர் தினத்தன்று
அடுத்த ஆண்டு வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி இரவு போட்டி ஒன்றில் வெற்றி பெறும் நபர் ஒருவர், அவருடன் ஒரு நபரை அழைத்து வந்து ஷாருக்கானின் வீட்டில் தங்கலாம். இரவு நேர உணவு, ஷாருக்கானின் படங்கள் என ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களும் அவர்களுக்கு காத்திருக்கின்றன.

என்ன செய்யவேண்டும்
www.airbnb.com ல் கொடுக்கப்பட்டுள்ள ஃபார்மை பூர்த்தி செய்து, நூறு வார்த்தைக்கு மிகாமல் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ரசிகர்கள் விடை அளித்தால் போதும். அதில் தேர்வாகும் அதிர்ஷ்டசாளி ரசிகருக்கு ஷாருக்கான் வீட்டில் ஒரு நாள் இரவு தங்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











