கிளாமர் திருவிழா.. ஆலியா பட் முதல் அனுஷ்கா ஷர்மா வரை.. ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர்கள் பட்டியல்!

மும்பை: 6ம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஃபேஷன் விருது விழா நேற்று இரவு மும்பையில் களைகட்டியது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு விருதுகளை தட்டிச் சென்றனர்.

ஆலியா பாட், அனுஷ்கா சர்மா, கீர்த்தி சனோன், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகள் ஒவ்வொரு பிரிவின் கீழ் தங்களுக்குகான விருதுகளை பெற்றனர்.

ஸ்டைல் ஐகான் ஆஃப் தி இயர் விருதை இந்த முறை பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலி கான் தட்டிச் சென்றார்.

விருது பெற்ற நடிகர், நடிகைகளின் முழு விவரத்தை இங்கே காணலாம்.

க்ரித்தி சனோன்

பாலிவுட்டின் இளம் நடிகை க்ரித்தி சனோனுக்கு 2019ம் ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான லுக்கா சுப்பி மற்றும் அக்‌ஷய் குமாருடன் அவர் நடித்திருந்த ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தன. நேற்று இரவு நடைபெற்ற ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் Fit & Fabulous விருது க்ரித்தி சனோனுக்கு வழங்கப்பட்டது.

கியாரா அத்வானி

எம்.எஸ். தோனி படத்தில் ஹோம்லியாக அறிமுகமான கியாரா அத்வானி, லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் காட்டிய கவர்ச்சி, அகில உலகையே ஆட்டிப் படைத்தது. அவருக்கு பொருத்தமான Hotstepper of the Year விருது நேற்றைய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வழங்கப்பட்டது.

ஸ்டைல் ஐகான்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இந்த் ஆண்டின் ஸ்டைல் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலா படம் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்து வருகிறது. சொட்டை தலை இளைஞராக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு மோஸ்ட் ஸ்டைலிஷ் ஸ்டார் (male) விருது வழங்கப்பட்டது.

ஆலியா பட்

பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியான ராஸி, கல்லி பாய் படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் ஆலியா பட் நடித்து வருகிறார். அவருக்கு மோஸ்ட் ஸ்டைலிஷ் ஸ்டார் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

டிவா ஆஃப் தி இயர்

தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களால் இணையத்தை ஹீட் ஆகி வந்த மலைக்கா ஆரோரா தான் இந்த ஆண்டின் Diva of the year விருதினை தட்டிச் சென்றுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா

இந்த ஆண்டின் சிறந்த கிளாமர் நடிகை விருதினை அனுஷ்கா ஷர்மா பெற்றுள்ளார். சிறந்த கிளாமர் நடிகர் விருதினை வருண் தவான் தட்டிச் சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X