Game of Thrones: வெயில் மண்டைய பொளக்குது, த்ரிஷாவுக்கு குளிருதாம்
சென்னை: கேம் ஆப் த்ரோன்ஸ் 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று இந்தியாவில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
கேம் ஆப் த்ரோன்ஸ் ஆங்கில தொடரின் 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. இது இறுதி சீசன் என்பதால் ரசிகர்களுக்கு கவலை ஒரு புறம் இருந்தாலும் எதிர்பார்த்த எபிசோட் வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ட்விட்டர் பக்கம் போனால் யாரை பார்த்தாலும் GoT என்று கேம் ஆப் த்ரோன்ஸ் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வின்டர் இஸ் ஹியர் என்று கூறி கேம் ஆப் த்ரோன்ஸ் பற்றி ட்வீட் செய்கிறார்கள்.
கேம் ஆப் த்ரோன்ஸ்
நம்ம த்ரிஷாவும் கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகை தான். சென்னையில் வெயில் மண்டையை பிளக்கும்போது வின்டர் இஸ் ஹியர் என்று கேம் ஆப் த்ரோன்ஸ் பற்றி ட்வீட்டியுள்ளார் த்ரிஷா.
வின்டர்
இங்க வெயில் பொளந்து கட்டுது உங்களுக்கு வின்டர் இஸ் கமிங்கா என்று த்ரிஷாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டப்பிங்
தமிழில் டப்பிங் செய்தால் நாமும் பார்க்கலாமே
வீடியோ கேம்ஸ்
கேம் ஆப் த்ரோன்ஸ் என்றால் என்ன என்று கேட்கும் ஆட்களும் இருக்கிறார்கள். அதை வீடியோ கேம் என்று சொல்பவர்களும் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











