Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி... டிக்கெட் விலை குறைப்பு
சென்னை : மக்களின் இரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும் AGS சினிமாஸ் பல புதிய முயற்சிகளை செய்து உள்ளது .
மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது AGS சினிமாஸ்.
பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பதத்தினரோடு வந்து திரைப்படங்களை காண்பதில் உள்ள சிரமங்களை கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள் .
சிக்கனமானதாகவும்
மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச்செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது AGS .
பல விருந்துகளை
ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும், அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில். அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், AP Productions தயாரித்த 'தேன்' எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது .
பலருக்கும் அழைப்பு
இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள் AGS குழுமத்தினர் .எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட வாருங்கள் சினிமாவை கொண்டாடுவோம் என்று பலருக்கும் அழைப்பு விட பட்டு வருகிறது .
Recommended Video
ஏற்றுக்கொண்டால்
பல உண்மை கதைகள் செல்லுலாய்டு சிற்பங்களாக மாறி மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் . மக்கள் மனதில் நீண்ட நாட்களுக்கு ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் . நல்ல படங்களுக்கு இப்படி பட்ட ஆதரவை எல்லா திரையரங்குகளும் தர வேண்டும் என்பது தான் எல்லாருடையய ஆசையும் கூட.மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் நிறைய தியேட்டர்கள் அபார்ட்மெண்டுகளாக, திருமண மண்டபங்களாக மாறாமல் இருப்பதை தவிர்க்கலாம் .