வித் லவ் வெற்றி.. இதுதான் சக்சஸா அப்பா?.. ரஜினியிடம் மகள் கேள்வி.. தலைவர் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: ரஜினியின் மகள் சௌந்தர்யா தயாரிப்பில் மதன் இயக்கத்தில் உருவான படம் வித் லவ். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும், மலையாள நடிகை அனஸ்வரா ஹீரோயினாகவும் நடித்தார்கள். பலருக்கு நாஸ்டால்ஜியா நினைவுகளை கிளறி மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதனையடுத்து படக்குழுவினர் ஒன்றாக சென்று போயஸ் கார்டனில் ரஜினிகாந்த்தை சந்தித்தார்கள். சூழல் இப்படி இருக்க அந்த சந்திப்பு குறித்து படத்தின் வெற்றி விழாவில் பேசியிருக்கிறார் சௌந்தர்யா.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷுடன் திருமண உறவில் இருந்தபோது 3 படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்கள் வெற்றி பெறாவிடாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு இயக்குநராக மாறியிருந்தார். ஆனால் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அப்படி இல்லை. முதலில் சந்திரமுகி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களுக்கு டைட்டில் டிசைன் செய்துகொண்டிருந்தார்.

இயக்குநராக தோல்வி: அதனையடுத்து கோவா படத்தை தயாரித்தார். பெரிதாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் படத்தை இயக்கினார். அது தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. கார்ட்டூன் நாடகங்களே பரவாயில்லை என பயங்கரமாக கிண்டல் செய்தார்கள். அப்படத்துக்கு பிறகு விஐபி 2 படத்தை இயக்கினார். அதுவும் தோல்வியைத்தான் சந்தித்தது.

With Love Becomes Mega Hit Soundarya Rajinikanth Shares Emotional Moment with Rajinikanth
Photo Credit:

மீண்டும் வந்த சௌந்தர்யா: அதற்கு பிறகு சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் வித் லவ் என்ற படத்தை தயாரித்தார். இதனை மதன் இயக்கினார். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஹீரோவாக நடிக்க; மலையாள நடிகை அனஸ்வரா ஹீரோயினாக நடித்தார். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். கடந்த ஆறாம் தேதி படமானது திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.

படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தார்கள். பல ரசிகர்களுக்கு அவர்களது முதல் காதல் பற்றிய நினைப்புகளை கிளறிவிட்டிருக்கிறது. படத்தின் மேக்கிங் உள்ளிட்டவைகளும் சிறப்பாக அமைந்ததன் காரணமாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதுவரை அந்தப் படம் 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சௌந்தர்யா உள்ளிட்டோர் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரஜினியுடன் சந்திப்பு: படம் பெற்ற மெகா வெற்றியை அடுத்து படக்குழுவினர் ஒன்றாக போயஸ் கார்ட்னுக்கு சென்று ரஜினிகாந்த்தை சந்தித்தார்கள். அப்போது படக்குழுவினர் ஒவ்வொருவரையும் பாராட்டிய ரஜினி; அவர்களை வெகுவாக பாராட்டி தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு நேற்று சென்னையில் வித் லவ் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

சௌந்தர்யா பேச்சு: அப்போது பேசிய சௌந்தர்யா, "இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சியை முடித்துவிட்டு ப்ரிமீயர் ஷோ போட்டோம். அதில் அப்பா படத்தை தூக்கி நிறுத்திவிட்டார். அதனையடுத்து நாங்கள் ஒன்றாக போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றோம்.அப்போது அப்பாவும், அம்மாவும் என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்கள். நான் அப்பாவிடம், 'இதுதான் சக்சஸா அப்பா' என்று கேட்டேன். அவர் சிரித்தார். அந்த சிரிப்பை எப்போதும் நான் மறக்கமாட்டேன். 17, 18 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுதான் எனது முதல் சக்சஸ் மீட்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X