With Love Box Office Day 1: வித் லவ் முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபீஸில் சர்ப்ரைஸ்.. இத்தனை கோடியா?
சென்னை: அறிமுக இயக்குநர் மதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ள பட, வித் லவ். இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்தை எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் மகேஷ் மற்றும் சீயோன் ஸ்டூடியோஸ் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தின் முதல் நாள் வசூல் குறித்து காணலாம்.
குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களை இணைந்து தயாரித்த எம்.ஆர்.பி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்ற தகவல் வெளியானதுமே இந்த படத்தின் கதை மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதற்கு ஏற்றது போல முதல் நாளில் படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம். படம் மிகவும் நன்றாக உள்ளது. நமது பள்ளி காலத்தை நினைவுக்கு கொண்டு வரும் என்று எல்லாம் சொல்லி வந்தார்கள்.

அதற்கு முன்னர் செலிபிரிட்டிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினர். படம் பார்த்த செலிபிரிட்டிகளும் படம் ரொம்பவும் நன்றாக உள்ளது. ஒரு ஃபீல் குட் மூவியாக இந்த படம் இருக்கிறது. படம் முழுக்க காமெடி, இரண்டாம் பாதியில் எமோஷனலான காட்சிகள், கடைசி 15 நிமிடத்தில் உச்சகட்ட காமெடி என மொத்த படமும் நன்றாக உள்ளது என்று பாராட்டினர்.
பாராட்டு: படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு என எல்லாம் நன்றாக இருந்தாலும் இவற்றை எல்லாம் ஓவர் டேக் செய்தது படத்தின் பின்னணி இசை தான். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்காக மிகவும் பார்த்து பார்த்து இசையமைத்துள்ளார். காட்சிக்கு காட்சி அவரது இசை படத்தை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் பலர் தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது என்று பாராட்டினார். அதேபோல் தேசிய விருது பெற்ற இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணனும் படம் நன்றாக உள்ளது, ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என்று விமர்சனம் தெரிவித்திருந்தார்.

முதல் நாள் வசூல்: படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டு இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இது மட்டும் இல்லாமல், படத்திற்கு சீரான அளவில் புக்கிங்கும் அதிகரித்ததால், வசூலிலும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கும் என்று படக்குழு நம்புகிறது. இப்படி இருக்கையில், படத்திற்கு முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் ரூபாய் 1.5 கோடிகள் வசூல் ஆகி இருக்கும் என்று சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் தான் ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.: மேலும் படத்தை வெளிநாட்டிலும் ரிலீஸ் செய்துள்ளதால், வெளிநாட்டிலும் படம் முதல் நாளில் கணிசமான வசூலை செய்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று விட்டதால், படத்திற்கு வரும் நாட்களில் அதிகப்படியான ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்று படக்குழு நம்புகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் ஃபீல் குட் படம் என்று விமர்சனத்தைப் பெற்றுள்ளதால் படத்திற்கு வரும் நாட்களில் அதிகப்படியான ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்று படக்குழு நம்புகிறது.


Click it and Unblock the Notifications











