With Love Box Office: காதலர் தினத்தில் குவிந்த கூட்டம்.. தாறுமாறாக எகிறிய வித் லவ் வசூல்!
சென்னை: தரமான கதை, பொருத்தமான திரைக்கதை, யதார்த்தமான நடிப்பு, கச்சிதமான பின்னணி இசை என வெற்றிக்குத் தேவையான எல்லாமும் நிறைந்த படத்தை மக்கள் மத்தியில் ஒரு படக்குழு கொண்டு சேர்த்துவிட்டால், படத்தின் வெற்றியை மக்கள் தாங்களாகவே உருவாக்கி படக்குழுவிடம் கொடுத்துவிடுவார்கள். இதற்கு கடந்த காலங்களில் பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், தற்போது தியேட்டரில் ஓடிக் கொண்டு இருக்கும் படமான வித் லவ் படமும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த படம் விமர்சன ரீதியாக ஏற்கனவே வெற்றியை ஈட்டிய நிலையில், வசூலிலும் கலக்கி வருகிறது. படம் வெளியாகி இன்றோடு அதாவது பிப்ரவரி 16ஆம் தேதியுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில் முதல் 10 நாட்களில் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதாவது, படம் முதல் 10 நாளில் ரூபாய் 25 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் வார நாட்களிலும் படத்திற்கு கணிசமான அளவு புக்கிங் இருந்து கொண்டே இருப்பதால் இந்த வாரம் முழுவதும் படம் தியேட்டரில் ஓடும் என்றும் படக்குழு நம்புகிறது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்புகிறது.

வித் லவ் படத்தைப் பொறுத்தவரை அறிமுக இயக்குநர் மதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்தை எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் மகேஷ் மற்றும் சீயோன் ஸ்டூடியோஸ் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படம் நன்றாக உள்ளது. ஃபீல் குட்டாக படம் உள்ளது என்றும் தெரிவித்தனர். பலரும் படத்தை பாராட்டினர், குறிப்பாக திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டினர். படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் என அனைவரது நடிப்பு குறித்தும் தனித்தனியாக குறிப்பிட்டு பாராட்டினார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது அப்பா மற்றும் அம்மாவைப் பார்த்து வெற்றி என்றால் இப்படித்தான் இருக்குமா என்று கேட்டு மகிழ்ச்சியில் இருவரையும் கட்டிப்பிடித்ததாக கூறினார். மேலும் தான் அப்படிக் கூறும்போது தனது தந்தை மிகவும் வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் சிரித்து கட்டிப் பிடித்தார் என்று கூறினார். இந்நிலையில் படம் முதல் 10 நாட்களில் ரூபாய் 25 கோடிகளுக்கு மேலாக உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











