With Love Day 2 Box Office - வித் லவ் 2வது நாள் வசூல் என்ன தெரியுமா?.. இன்னொரு பிரதீப் ரங்கநாதன் ரெடியோ?
சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும், மலையாள திரையுலகத்தை சேர்ந்த அனஸ்வரா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் பட்ம வித் லவ். மதன் என்ற புதுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். ட்ரெய்லர், டீசர் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்று படம் பற்றி எதிர்பார்ப்பை பற்ற வைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் படமானது ரிலீஸானது.
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி திரைத்துறைக்கு வந்தவர் அபிஷன் ஜீவிந்த். சிறு வயதே ஆன அவர் தனது முதல் படத்திலேயே தரமான செய்கையை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். கண்டிப்பாக அவருக்கென்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் இருக்கிறது; வருங்காலத்தில் பெரிய இயக்குநராக மாறிவிடுவார் என்றெல்லாம் ஆரூடங்கள் அப்போது கூறப்பட்டன.
அபிஷனின் முடிவு: முதல் படத்துக்கு பிறகு இரண்டாவது படத்தில் யாரை ஹீரோவாக வைத்து இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்; அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இவரே ஹீரோவாக நடிக்க முடிவு செய்துவிட்டார். ஏற்கனவே டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் முக்கியமான ரோல் ஒன்றை அவர் ஏற்றிருந்தார். அதை சிறப்பாகவே செய்திருந்தார். அந்த நம்பிக்கையில் ஹீரோவாக களமிறங்க, ஹீரோயினாக அனஸ்வராவை ஃபிக்ஸ் செய்தார்கள்.

ரஜினி மகள் தயாரிப்பு: இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருப்பது ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. அவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம்தான் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். மதன் என்ற புதுமுகம் படத்தை இயக்கியிருக்கிறார்.இயக்கத்தில் எப்படி முத்திரை பதித்தாரோ அதேபோன்ற ஒரு முத்திரையை நடிகராகவும் அபிஷன் பதிப்பார் என்று திரைத்துறையில் பலரும் தொடங்கியிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் ரிலீஸ்: படமானது நேற்று முன்தினம் ரிலீஸானது. காதல் ஜானரில் உருவாகியிருக்கும் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள். அதிலும் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் கலக்கிவிட்டார்; கண்டிப்பாக அவர் பிரதீப் ரங்கநாதன் போன்று ஹீரோவாகவே இனிமேல் தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
வித் லவ் பாக்ஸ் ஆஃபிஸ்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளில் அந்தப் படம் 1.6 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது இரண்டாவது நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றி 1.93 கோடி ரூபாயை அள்ளி மொத்தம் இந்தியாவில் இதுவரை 3.53 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். நாளுக்கு நாள் வசூல் ஏறிவருவதால் படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மேலும் நல்லபடியாக வசூல் செய்தால் அபிஷன் ஹீரோவாக வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். எனில் இன்னொரு பிரதீப் ரங்கநாதன் ரெடியோ என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











