With Love Day 3 Box Office - வித் லவ் 3வது நாள் வசூல் சூப்பர்.. பாக்ஸ் ஆஃபிஸில் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ்

சென்னை: அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ஜோடியாக நடித்திருக்கும் வித் லவ் படத்தை ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். படமானது கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதன்முறையாக அபிஷன் ஹீரோவாக நடித்திருப்பதாலும், நீண்ட நாட்கள் கழித்து சௌந்தர்யா படம் தயாரித்திருப்பதாலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை படம் ஓரளவுக்கு திருப்தி செய்திருக்கிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறுவது அதிகரித்தது. அதேபோல் இப்போது இளம் இயக்குநர்களும் கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ் வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தும் இப்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். மதன் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் வித் லவ் படத்தில்தான் அபிஷன் ஹீரோவாகியிருக்கிறார்.

ரஜினி மகள் தயாரிப்பு: அபிஷன் ஜீவிந்த்துக்கு ஹீரோயினாக கேரள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் தயாரிப்பில் களமிறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக வெல்ல முடியாத அவர்; தயாரிப்பாளராக வென்றுவிட வேண்டும் என்ற முழு முனைப்பில் இப்படத்தின் வேலைகளில் இறங்கினார்.

With Love Day 3 Box Office Abhishan Jeevinth s Film Crosses 6 28 Crore in Tamil Nadu
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: படமானது கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும். காதல் ஜானரில் உருவாகியிருக்கும் படம் ஃபீல் குட்டாக அமைந்திருக்கிறது. இயக்குநரின் வேலைப்பாடுகளை பார்க்கும்போது இது அவருக்கு முதல் படம் மாதிரியே தெரியவில்லையே என்று ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தார்கள்.

அபிஷனுக்கும் பாராட்டு: முக்கியமாக படத்தில் பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். ஹீரோவாக அவர் சமாளித்துவிடுவாரா என்றுதான் அனைவருமே நினைத்தார்கள். ஆனால் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சிவரை அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். எக்ஸ்பிரஷன்கள், காமெடி, நடனம் என அனைத்திலும் தேர்ந்த நடிகர் போல் ஜொலித்துவிட்டார். இனி வரும் காலங்களில் பிரதீப் ரங்கநாதன் போல் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் இருப்பதாக அனைவருமே சொல்கிறார்கள்.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 1.4 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 2.2 கோடி ரூபாயையும் வசூலித்த அப்படம் மூன்றாவது நாளான நேற்று வசூலில் டாப் கியரில் சென்றிருக்கிறது. நேற்று மட்டும் மொத்தம் தமிழ்நாட்டில் 2.68 கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் மூன்று நாட்களில் 6.28 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.

More from Filmibeat

Read more about: with love
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X