சூப்பர்ஸ்டார் மகளின் கட்டிப்பிடி வைத்தியம்.. எல்லாம் With Love கொடுக்கும் தைரியம்தான்.. ஒரே குஷி
சென்னை: அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வித் லவ். இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை குட் நைட் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சீயோன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. படம் வரும் 6ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரிவியூ ஷோக்களில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தொடங்கி மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் சீயோன் நிறுவனத்தின் உரிமையாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது படக்குழுவினரை கட்டிப் பிடித்து, ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித் லவ் விமர்சனம்: படம் பார்த்த பிரபலங்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் அதுவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான தரமான படங்களில் ஒன்றாக இந்த படம் இருக்கும் என்ற பேச்சுக்கள் இப்போதே அடிபடுகிறது. இது மட்டும் இல்லாமல் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும், காதலர்களுக்கு இந்த படம் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பாராட்டு மழை: படத்திற்கு விமர்சகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை மனம் விட்டு பாராட்டுவதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம். படம் ஓடிடியிலும் நல்ல பிசினஸ் செய்துள்ளதால் தியேட்டரிலும் நல்ல வசூலை அள்ளும் என்ற நம்பிக்கையும் படக்குழுவுக்கு உள்ளதால் படத்தின் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே மொத்த படக்குழுவுக்கும் ட்ரீட் வைத்துவிட்டார் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. வித் லவ் படத்தின் புரோமோசன்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











