With Love Official Box Office: 3 நாளில் உலகளவில் செம வேட்டை.. ‘வித் லவ்’ அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ்!
சென்னை: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் சுமார் 90 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய நிலையில், அறிமுக ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்' திரைப்படம் வசூல் செய்யுமா? செய்யாதா? என ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன.
ஆனால், இந்த பிப்ரவரி மாதம் இதுவரை வெளியான படங்களிலேயே வெற்றிப் படம் என்றால் அது 'வித் லவ்' படம் மட்டும் தான் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான வித் லவ் திரைப்படம் முதல் 3 நாட்களில் நல்ல வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் போஸ்டரையே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெற்றிப் பெற்ற வித் லவ்: குறைந்த பட்ஜெட்டில் செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion நிறுவனமும் மகேஷ் ராஜின் MRP எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்த With Love படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமானார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் லீடு ரோலில் நடித்துள்ள இந்த படம் இளைஞர்கள் மத்தியில் காதலர் தினக் கொண்டாட்ட படமாக மாறி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கடந்த 3 நாட்களில் ஏகப்பட்ட ஷோக்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறிய நிலையில், வெற்றிப் படமாக மாறியுள்ளது.
வித் லவ் 3 நாள் வசூல்: உலகளவில் வித் லவ் திரைப்படம் கடந்த 3 நாட்களில் அதிகபட்சமாக 11 கோடி ரூபாய் வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருப்பதாக MRP எண்டர்டெயின்மெண்ட் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. காதலர் தின வாரமான இந்த வாரம் முழுவதும் மேலும், வசூலை வித் லவ் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செளந்தர்யா ரஜினிகாந்த் செம ஹேப்பி: செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், அவர் தயாரிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம் வெற்றிப் படமாக மாறியுள்ள நிலையில், செம சந்தோஷத்தில் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள். அபிஷன் ஜீவிந்த் வெற்றி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











