Rajini Daughter: ரஜினி மகளின் உச்சகட்ட கோபம்.. படப்பிடிப்பில் பதறிய With Love டீம்.. என்ன ஆச்சு?

சென்னை: அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவான படமான வித் லவ் படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். படத்தில் கதாநாயகியாக அனஸ்வரா ராஜா நடித்துள்ளார். படத்தை MRP என்டர்டைமெண்ட் நிறுவனமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் சீயோன் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஏற்கனவே செலிபிரிட்டி ஷோ, பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திரையிடல் என எல்லாவற்றிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படி இருக்கையில் படத்தின் புரோமோஷன்களில் ஒன்றாக மொத்த படக்குழுவினரும் பேட்டி அளித்தனர். அதில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உச்சகட்ட கோபம் எப்படி இருக்கும் என்றும், சௌந்தர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்தில் கோபப்படுவாரா என்றும் கேள்விகள் எழுப்பபட்டது.

With Love Team Opens About Soundarya Rajinikanth Extreme Tension at Shooting Spot

படக்குழு: இதற்கு பதில் அளித்த படத்தின் ஒரு தயாரிப்பாளரான மகேஷ் ராஜ், " சௌந்தர்யா அக்கா என்னிடத்தில் கோபத்தை வெளிக்காட்டவே மாட்டார். பெரும்பாலும் அவர் என்னிடத்தில் கோபப்பட்டதே கிடையாது. அப்படி இருக்கையில் அவரின் உச்சகட்ட கோபமே, தம்பி.... என்று நீட்டி அழைப்பது தான்" என்று தெரிவித்தார்.

உச்சகட்ட கோபம்: அதேபோல் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள அபிஷன் ஜீவிந்த் சொல்லும் போது, நாங்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடமும் எங்களுடன் சிரித்து பேசிக் கொண்டு இருப்பார். உடனே மகேஷ் சாரோ அல்லது வேறு யாரோவோ வந்து மேடம் கோபமா இருக்காங்க என்று கூறுவார்கள். எனக்கு எல்லாம் ஷாக் ஆகி விடும், என்னது கோபமா இருக்காங்களா..? எப்போ..? நல்லாத்தானுங்க பேசிட்டு போனாங்க என்று கூறுவேன்" இவ்வளவுதான் அவரது கோபம் என்று கூறி உள்ளார்கள். இவர்களின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் இன்று வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X