என் வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்தவர் நீங்கள்.. இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கம்!

By

திரிச்சூர்: என் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவர் நீங்கள்தான் என்று இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கமாக கூறியுள்ளார்.

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Passed Away | Filmibeat Tamil

பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.

இதில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இவர் சேது என்பவருடன் இணைந்து சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவந்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக ஸ்கிரிப்ட் எழுதினார். திலீப் நடித்த ராம்லீலா, டிரைவிங் லைசன்ஸ் உட்பட சில படங்களுக்கு எழுதினார். இதில், பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடித்திருந்த டிரைவிங் லைசன்ஸ் கவனிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

ஏற்கனவே அனார்கலி என்ற படத்தை இயக்கிய சச்சி, அடுத்து அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கினார். இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சச்சிக்கு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இழந்துவிட்டதாக

இழந்துவிட்டதாக

இதனால் ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவருக்கு, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் சீராக இல்லை. இதையடுத்து நேற்றிரவு மரணமடைந்தார். அதிர்ச்சி அடைந்த மலையாள திரையுலகினர், முக்கியமான ஸ்கிரிப்ட் டைரட்டரையும் இயக்குனரையும் இழந்துவிட்டதாகக் கூறி வருகின்றனர்.

ஜான் ஆப்ரஹாம்

ஜான் ஆப்ரஹாம்

அய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நடிகர் ஜான் ஆப்ரஹாம், துல்கர் சல்மான் உட்பட பல திரை பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, லால், முகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, பிரபல ஹீரோ திலீப், உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

வார்த்தைகள் இல்லை

வார்த்தைகள் இல்லை

'ராம் லீலா படம் மூலம் எனக்கான வாழ்க்கையை திரும்ப கொடுத்தவர் நீங்கள் சச்சி. இது புறப்படும் நேரம். உங்களை போன்ற ஒரு சகோதரரை பிரியும்போது ஏற்படும் உணர்வை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை' என்று கூறியுள்ளார். மறைந்த சச்சியின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X