Leo Trailer - லியோ ட்ரெய்லர் வெளியீடு.. படக்குழு போட்டிருக்கும் பிரமாண்ட பிளான்.. செம ஐடியாவா இருக்கே

சென்னை: Leo Trailer Update (லியோ ட்ரெய்லர் அப்டேட்) லியோ ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படக்குழு பக்கா பிளானை போட்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது இப்போது லியோதான். படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன. கடந்த வாரத்தில் படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகின.

With the trailer of Leo releasing on October 5 the team has made a big plan

ஆடியோ லான்ச் ரத்து: நிலைமை இப்படி இருக்க செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோவின் ஆடியோ லான்ச் நடப்பதாக இருந்தது. பாஸ்கள் வழங்கப்பட்டு மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கின. ஆனால் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என குறிப்பிட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

செகண்ட் சிங்கிள்: ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர்.

ட்ரெய்லர் வெளியீடு: சூழல் இப்படி இருக்க இன்று காலையிலிருந்தே லியோவிலிருந்து ஏதேனும் அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி போஸ்டருடன் ஒரு அப்டேட் வெளியிடப்பட்டிருந்தது. அதில் லியோ ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரில் ஓநாயுடன் விஜய் சண்டை போடுவது போல் புகைப்படம் இருந்தது.

புதிய ஏற்பாடு: இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அதற்காக ஸ்பெஷல் ஏற்பாடு ஒன்றை படக்குழு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களில் தற்காலிகமாக பெரிய திரைகளை அமைத்து ட்ரெய்லரை திரையிட படக்குழு ஏற்பாடு செய்திருக்கிறதாம்.

ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டாலும் விஜய்யின் மாஸை மற்றவர்கள் உணர்ந்துகொள்வதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இதற்கிடையே விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X