பாரதிராஜா இல்லையென்றால் இளையராஜாவே இல்லை.. சோறு போட்டு வளர்த்தவர்.. கண்ணீர் மல்க கதறிய கங்கை அமரன்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதாவது ஜூன் 10ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடி, ஸ்டூடியோவுக்குள் முட்டி மோதிக் கொண்டு இருந்த சினிமாவை சுதந்திரக் காற்றை அனுபவிக்கச் செய்தவர். இவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில், பாரதிராஜா குறித்த நினைவலைகளை இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " பாரதிராஜா இல்லை என்றால் நான் இல்லை, இளையராஜா இல்லை.பாரதிராஜா தான் முதன் முதலில் எங்கள் ஊரில் இருந்து சினிமாவுக்காக வெளியே வந்தவர். அதன் பின்னர் தான் நாங்கள் வந்தோம். நாங்கள் வந்த காலத்தில் எங்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து எங்களுக்கு சோறு போட்டு பார்த்துக் கொண்டவர் பாரதிராஜா. அவர் இல்லை என்றால் நாங்கள் யாருமே இல்லை.

பாரதிராஜாவின் மரணத்தில் நின்று கொண்டு: அவரது மரணத்தில் நின்று கொண்டு என்ன பேசுவது, அவர் எங்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளார் என்று ஏற்கனவே பல நேரங்களில் பத்திரிகைகளில் பேட்டியாக கொடுத்துள்ளோம். இப்படி ஒரு சூழலில் எப்படி நாங்கள் பேச முடியும். அவரது படைப்பு இருக்கும், அதைப் பார்த்து பார்த்து சந்தோஷப்பட வேண்டியதுதான்" என்று பேசினார்.
இளையராஜா: இதற்கு முன்னதாக பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இளையராஜா பேசுகையில், " பாரதிராஜாவின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிறார்த்திக்கிறேன்" என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் சில கேள்விகளை முன் வைத்த போது, " பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தால் தானே பேசுவதற்கு? என்று பதில் அளித்தார், அதைத் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, " நான் என்ன பேட்டி கொடுக்கிறேனா? பேட்டி எடுக்கக்கூடிய இடமா இது?" என்று மிகவும் கோபமாக பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு உள்ளதோ, அதேபோலத்தான் எனக்கும் பாரதிராஜாவுக்கும் என்று தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications