மனைவி அடுத்த அறையில் இருக்க என்னை முத்தமிட முயன்றார்: நடிகர் மீது பெண் பத்திரிகையாளர் புகார்
மும்பை: மனைவி அடுத்த அறையில் இருக்க என்னை முத்தமிட முயன்றார் என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் ரோஹித் ராய் மீது புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் நானும் தான், நானும் தான்(Me Too) என்ற குரல் கேட்கிறது. பிரபலங்கள் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ரோஹித் ராய் மீதும் புகார் எழுந்துள்ளது.

ரோஹித் ராய்
எனக்கு 16 வயதில் இருந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் நடிகர் ரோஹித் ராய். தன் மனைவி அடுத்த அறையில் இருந்தபோதே என்னை முத்தமிட பார்த்தார். எனக்கு பல முறை தொல்லை கொடுத்துள்ளார் என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரோஹித் ராய் அதை மறுத்துள்ளார்.

பாலியல் தொல்லை
அந்த பெண் பத்திரிகையாளருக்கு நான் பாலியல் தொல்லை அளிக்கவில்லை. இது குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த பெண் எதற்காக என் பெயரை தெரிவித்துள்ளார் என்று புரியவில்லை. இது போன்ற புகார்களால் உண்மை விவகாரங்கள் பொய்யாக்கப்படும் என்பதே கவலையான விஷயம் என்கிறார் ரோஹித் ராய்.

கமென்ட்
என் மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் திட்டமிடவில்லை. இது பற்றி இனியும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று தெரியவில்லை. இது குறித்து பத்திரிகையாளர்களான நீங்களும் கண்டுகொள்ளாதீர்கள் என்று ரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர் புகார்கள்
பாலிவுட் நடிகர் நானா படேகர், எழுத்தாளர் சேத்தன் பகத், இயக்குனர் ரஜத் கபூர், இயக்குனர் விகாஸ் பெஹல், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஜுல்ஃபி செய்யது, நடிகர் ஆலோக் நாத் ஆகியோர் மீது இது வரை பாலியல் புகார் எழுந்துள்ளது. இதில் ஆலோக் நாத் மீது பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











