அந்தரங்க வீடியோவை வெளியிட்டு பிரபல நடிகைக்கு தொடர்ந்து மிரட்டல்.. கோவை பெண் அதிரடி கைது

By

சென்னை: கணவருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்டு பிரபல நடிகையை மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் காயத்ரி சாய் (55). இவர் அஞ்சலி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் பழக்கமானவர், திருச்செங்கோடை சேர்ந்த விஸ்வதர்ஷினி.

அவதூறு கருத்து

அவதூறு கருத்து

இவரும் தோழிகள் ஆனார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்தனர். இதனால் காயத்தரி சாயை பழிவாங்க நினைத்த விஸ்வதர்ஷினி, அவர் மகளுடன் நடிகர் விஷாலை இணைத்து அவதூறு கருத்துகளை யூ-டியூப்பில் சில மாதங்களுக்கு முன், வெளியிட்டார்.

சுவர் ஏறிக் குதித்து

சுவர் ஏறிக் குதித்து

நடிகர் விஷால், காயத்ரி சாய் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காயத்ரி சாய் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நெருக்க வீடியோ

நெருக்க வீடியோ

பின்னர் விஸ்வதர்ஷினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி காயத்ரி சாயை அவர் மிரட்டி வந்தாராம். இந்நிலையில், நடிகை காயத்ரி சாய், பல ஆண்டுகளுக்கு முன், தன் கணவருடன் நெருக்கமாக இருந்ததாக சில வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் விஸ்வதர்ஷினி வெளியிட்டுள்ளார்.

தலைமறைவு

தலைமறைவு

இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி சாய், விஸ்வதர்ஷினி மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். விஸ்வதர்ஷினி மீது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி போலீசார், வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதையறிந்த விஸ்வதர்ஷினி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வந்தனர்.

ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இந்நிலையில், கோவையில் இருந்து ரயில் மூலம் விஸ்வதர்ஷினி சென்னை வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீசார், விஸ்வதர்ஷினியை கைது செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X