Vijay Antony Daughter-விஜய் ஆண்டனி மகள் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. நெஞ்சே வலிக்குது..வீட்டு பணி பெண் உருக்கம்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி மகள் மீரா குறித்து வீட்டு பணி பெண் உருக்கமாக பேசியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். யாரிடமும் அதிர்ந்து பேசாமல் அனைவரையும் மதிக்கும் குணமுடைய அவருக்கு மீரா, லாரா என்ற இரண்டு பெண் குழந்தைகள்.

மீரா: இரண்டு பெண் குழந்தைகளில் மீரா சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். தனது தந்தை போலவே பல விஷயங்களில் திறமையை வெளிப்படுத்திய மீரா கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை திரையுலகினர் மட்டுமின்றி சாமானிய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறுதிச்சடங்கு: மீராவின் இறுதிச்சடங்கு இன்று மாலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கல்லறையில் இடம் கிடைக்க தாமதம் ஆனதால் அவரது இறுதிச்சடங்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் 11 மணிக்குள் நடக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நல்ல பெண்: மீரா குறித்து அவரது ஆசிரியர்கள், தோழிகள் பேசுகையில் மீரா ரொம்பவே நல்ல பெண். தைரியமான பெண். தனது தந்தையுடம் சுதந்திரமாக பேசக்கூடியவர். இருந்தாலும் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது புரியவில்லை என கூறுகின்றனர் அதிர்ச்சியும், சோகமும் விலகாமல். இந்தச் சூழலில் மீரா குறித்து விஜய் ஆண்டனி வீட்டு பணி பெண் சந்திரகாந்தி பேசியிருக்கும் விஷயம் பலரையும் கலங்கடித்திருக்கிறது.
ரொம்ப நல்ல பெண்: வீட்டு பணி பெண் பேசுகையில், "விஜய் ஆண்டனியின் வீட்டில் மூன்று மாதங்களாக சமைத்தேன். மீரா ரொம்பவே நல்ல பெண். தினமும் நான் தான் அவருக்கு சமைத்துக்கொடுப்பேன். அவர்களது குடும்பமே ரொம்ப பாசமாக இருப்பாங்க. எது வேண்டும் எது வேண்டாம்னு கேட்டாக்கூட இதோ வரேன் ஆன்ட்டி என்று சொல்லும்.
டிஸ்டர்பே பண்ணமாட்டா: அந்த பொண்ணு என்னை டிஸ்டர்பே பண்னாது. அதுவே வந்து எடுத்துக்கும். டீயோ காபியோ வேண்டுமென்றால் மட்டும்தான் நம்மிடம் கேட்கும். மற்றபடி எது வேண்டுமானாலும் அதுவே எடுத்துக்கொள்ளும். அவ்வளவு அமைதியான பொண்ணு. வீட்டில் இருக்கா இல்லையா என்றுகூட தெரியாது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காது.
தயிர் சாதம்னா பிடிக்கும்: சாப்பாடில் இதுவரை எந்த குறையும் சொன்னதே இல்லை. மீராவுக்கு தயிர்னா ரொம்பவே இஷ்டம். தயிர் போட்டு வைத்தால் போதும் அந்த பொண்ணுக்கு. இந்த செய்தி கேட்டு எனக்கு நெஞ்சே வலிக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் இங்கிருந்து போனேனே ஒழிய வேண்டுமென்றே போகவில்லை. எனது மகள் கர்ப்பம் ஆனதால்தான் போனேன். மீராவின் இந்த வருட பிறந்தநாளுக்கெல்லாம் நான் இங்குதான் இருந்தேன். என்னிடம் ஆசீர்வாதம் எல்லாம் வாங்கினார். அவரை கடைசியாக பார்த்துவிட வேண்டுமென்று பெரம்பூரிலிருந்து வந்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











