அரசு இடத்தில் ஆபாச வீடியோ.. சர்ச்சை நடிகைக்கு எதிராக களமிறங்கிய மகளிர் அணி.. கைதாவாரா பூனம் பாண்டே?
கோவா: சர்ச்சை நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சமீபத்தில், ஹாலோவின் சர்ப்ரைஸ் என நீர் தேக்கம் ஒன்றின் அருகே நிர்வாணமாக எடுத்த ஆபாச வீடியோவை நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அரசு இடத்தில் இப்படி ஆபாச வீடியோவ் எடுக்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியுடன் நடிகை பூனம் பாண்டே மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்துள்ள சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். எந்தவொரு கட்டுப்பாடும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் இல்லாததால், பூனம் பாண்டேவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஹனிமூன்
காதலர் சாம் பாம்பேவை கடந்த செப்டம்பர் மாதம் பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்ட நிலையில், கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். ஆரம்பத்தில் கணவர் சாம் உடன் கோவாவில் அட்டகாசம் செய்யும் வீடியோக்களையும், அலங்கோல போட்டோக்களையும் பதிவிட்டு வந்த பூனம் பாண்டே, கடைசியில் கணவர் மீதே புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

என்ன டீலிங்கோ
ஆனால், பூனம் பாண்டேவின் ஏகப்பட்ட லீலைகள் கணவர் சாம் பாம்பேவுக்கு தெரியும் என்பதால், அவரை விட்டு பிரிந்து விட பூனம் பாண்டேவால் முடியவில்லை. அதனால், மறுபடியும் இருவரும் சேர்ந்து விட்டோம் என கணவர் சாம் உடன் இருக்கும் போட்டோவை போட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆபாச வீடியோ
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஹாலோவின் சர்ப்ரைஸ் எனக் கூறி பூனம் பாண்டே பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுவரை ஸ்டூடியோவுக்குள் ஆபாச வீடியோக்களை படம் பிடித்து போட்டு வந்த பூனம் பாண்டே இப்போ அரசு இடத்தில் வீடியோ வெளியிட்டது பிரச்சனையை கிளப்பி உள்ளது.

பூனம் பாண்டேவுக்கு எதிராக புகார்
கோவா ஹனிமூனை இன்னமும் பூனம் பாண்டே முடித்ததாக தெரியவில்லை. கோவாவில் உள்ள நீர்த்தேக்கம் அருகில் நிர்வாணமாக ஆடைகளை கழட்டி பூனம் பாண்டே எடுத்த ஆபாச வீடியோவுக்கு எதிராக கோவா கோவா முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி தெற்கு கோவா எஸ்.பியிடம் பூனம் பாண்டேவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அரசு இடத்தில் எப்படி?
கோவாவின் கனகோனா இடத்தில் உள்ள சாப்போலி நீர்த்தேக்கம் அருகே, நடிகை பூனம் பாண்டே எப்படி நிர்வாண வீடியோ எடுத்தார் என்றும், அதற்கு அனுமதி அளித்தது யார் என்றும் அந்த கட்சியின் மகளிர் அணி கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











