மீண்டும் தேர்தல் வேண்டும்.. எல்லாமே சூழ்ச்சி.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்!

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு ஆளுநரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். மேலும், ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியும் ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இது தவெக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருவாரியான மக்கள் அவரை தேர்ந்தெடுத்து இருக்கும் போது, அவரைத் தடுப்பது ஜனநாயக மரபு இல்லை என்று பலர் கூறி வரும் நிலையில், பெண்கள் மீண்டும் தேர்தல் வரட்டும் என ஆதங்கத்துடன் பேசி உள்ளனர்.

Vijay TVK Leader

பெண்கள் ஆதங்கம்: யூடியூப் சேனலில் பேசிய பெண்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த தேர்தலிலும் நாங்கள் விஜய்க்கு தான் வாக்களிப்போம். ஏனென்றால் இந்த முறை நடந்த தேர்தலில் கிளம்பாக்கத்தில் பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். தனியார் பேருந்துகளிலும் ஓட்டுநர் இல்லை, அரசு பேருந்துகளே இல்லாதால் பெருவாரியான மக்களால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. இது தான் இந்த இழுபறிக்கு காரணம். இதனால் மீண்டும் தேர்தல் வரட்டும், அப்போதும் நாங்கள் விஜய்க்கு தான் வாக்களிக்போம் என்றார்.

எல்லாமே சூழ்ச்சி: மற்றொரு பெண், தமிழகத்தில் அனைவரும் ஒரு நல்ல தலைவர் வர வேண்டும் என அலசி ஆராய தொடங்கி விட்டார்கள். திமுக முதலில் மூன்றாவது இடத்தில் இருந்தது அதன் பிறகு இரண்டாவது இடத்திற்கு வந்தது. இரண்டாவது இடத்திற்கு வந்தும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றுவிட்டதால், அவரால் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியவில்லை. குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது கூட, சூழ்ச்சி செய்து தான் அந்த இடங்களிலும் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனால் மீண்டும் தேர்தல் வந்தால் நாங்கள் விஜய்க்கு வாக்களித்து ஃபுல் மெஜாரிட்டியுடன் அவரை ஜெயிக்க வைப்போம் என பேசி உள்ளனர்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X