கால்பந்து வீராங்கனை மனதையும் பெற்றோர்கள் மனதையும் மாற்றியிருக்கும் பிகில்
Recommended Video
மதுரை : பிகில் படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் படம் பல படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து உள்ளது . படத்தின் கதை படி தன் வாழ்வில் கால்பந்தை தொடர முடியாத பிகில் என்கிற மைக்கேல்க்கு ஒரு பெண்கள் கால்பந்து அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கிறது ,அதில் மைக்கேல் சரியாக அந்த பெண்களை வழிநடத்தி பெண்களை வெற்றி பெற செய்தாரா என்பதே பிகில் பட கதை .
பெண்களின் சுதந்திரம் பற்றியும் இந்த சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதி பற்றியும் படத்தில் பேசியிருப்பார்கள், படத்தில் பெண்களை ஊக்குவிக்க சிங்கபெண்ணே என்ற பாடலும் இடம் பெற்றிருக்கும் அந்த பாடல் படத்தில் வரும்போது இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானும் அட்லியும் திரையில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்து அளித்திருப்பர்.

தற்போது பிகில் படத்தின் வெற்றி எந்தளவுக்கு பெரியது என்பதை ஒரு சம்பவம் உறுதி செய்துள்ளது .இந்த படம் பெண் வீராங்கனைகளை பெற்ற பெற்றோரை சரியாக சென்று சேர்ந்திருக்கிறது .பிகில் படம் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாக கால்பந்து பயிற்சியாளர் ரஞ்சிதா கூறியுள்ளார்.
அகில இந்திய பெண்கள் கால்பந்து அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பெங்களூருவில் நடை பெற்றன .நாடு முழுவதும் இருந்து பல அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர், தற்போது அவர்கள் அகில இந்திய பெண்களுக்கான கால்பந்து அணிக்கு தேர்வாகி உள்ளனர் .

இதையடுத்து மதுரை திரும்பிய பெண்கள் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டு வீராங்கனைகளுக்கு பொன்னாடையும் போற்றி வரவேற்கபட்டார்கள் .
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கால்பந்து பயிற்சியாளர் ரஞ்சிதா, தான் இந்த அணியில் கால்பந்து பயிற்சியாளராக மூன்று வருடம் காமராஜர் பல்கலைக்கழக அணிக்காக பணியாற்றி வருவதாகவும், ஐந்து வருடத்திற்கு பிறகு அணி மீண்டும் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் ,மேலும் அனைத்திந்திய கால்பந்து அணிக்கு இந்த வீராங்கனைகள் தேர்வாகி உள்ளதையும் தெரிவித்தார்.பிகில் படத்தில் கூட எனது பயிற்சியின் கீழ் இருந்த 7 பெண்கள் தான் நடித்திருப்பதாகவும் கூறினார் ரஞ்சிதா .
விஜயின் பிகில் படம் மூலம் நல்ல வரவேற்பு எங்களுக்கு கிடைத்துள்ளது,பெண்களின் பெற்றோர்கள் நன்றாக ஆதரவு தருகிறார்கள் என்றும், இந்த படத்திற்கு பிறகு தானே முன்வந்து பல பெற்றோர்கள் பெண்களை கால்பந்து பயிற்சிக்கு அனுப்பி வைப்பதாகவும் பயிற்சியாளர் ரஞ்சிதா கூறியுள்ளார்.
வசூல் சாதனையை தாண்டி பிகில் மக்களின் மனதை வென்றிருப்பதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











