For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா? - நாச்சியார் டீசர் சர்ச்சைக்கு வாசுகி பதில்

  By Shankar
  |
  எதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா? - நாச்சியார் டீசர் சர்ச்சை- வீடியோ

  தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்குள் நடிகர்களை பொருத்தி படமெடுப்பதில் தனித்துவம் மிக்க இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பாலா.

  பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது படம் மட்டுமே அனைத்து பிரிவினருக்கும் லாபத்தை கொடுத்த படம். சூர்யா, விக்ரம் - சூர்யா, ஆர்யா, விஷால் - ஆர்யா, அதர்வா, இயக்குனர்சசிக்குமார் என முன்ணணி நடிகர்கள் நடித்து பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் இவருக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும்பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கிறது.

  Women's Association condemns Bala's Naachiyaar teaser

  பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  டீசரில் வரும் கெட்ட வார்த்தைக்கு சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இது சம்பந்தமாக மாதர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்ற துணை கேள்வியும் வலைதள வாசிகளால் எழுப்பபட்டுள்ளது.

  இது சம்பந்தமாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு நிர்வாகி உ.வாசுகி, "அநீதி என்கிற போது அதை எவர் வேண்டுமானாலும் எதிர்த்து போராடலாம். அதை விடுத்து மாதர் சங்க அமைப்புகளை நோக்கி கேள்விகளை தொடுப்பது நியாயமாக படவில்லை," என்கிறார்.

  மேலும் கூறுகையில், "நாச்சியார் டீஸரில் பயன்படுத்தபட்டுள்ள தவறான வார்த்தைக்கு மாதர் சங்கம் என்ன செய்தது என்பது தான் இப்போது டிரெண்டிங் போல!

  சிம்புவின் கேவலமான பாடலைக் கண்டித்த பின் இந்த கேள்வி எந்த பிரச்சினை நடந்தாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நோக்கி வீசப்படுகிறது.

  கேட்பவர்கள் கேள்வியை முக நூலில் பதிவு செய்வதே மிக பெரும் சமூக சேவையாக நினைத்து விடுகிறார்கள். சமூக பணி இவ்வளவு சுலபம் என எண்ணுவதே அவர்களின் அறிவு பற்றாக்குறையைக் காட்டுகிறது.

  இந்த கேள்வியில் சிம்பு பாடலின் வக்கிரம் உட்பட கடந்த காலத்தில் மாதர் சங்கம் எதிர்த்த பலவற்றை குறித்த பொருமலே வெளிப்படுகிறது.

  நியாயமல்ல என்று நினைப்பதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதை விடுத்து மாதர் சங்கத்தை நக்கல் செய்வது, அறிக்கை விட்டோமே என்றால் ஏன் இயக்கம் நடத்தவில்லை என்பது இயக்கம் நடத்தினோம் என்றால் மீடியாவில் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்பது, போட்டோவை போட்டால் ஏன் போலீஸ் புகார் கொடுக்கவில்லை என கேட்பது.... இப்படி பட்டியல் நீள்கிறது.

  எனவே அநீதியை எதிர்ப்பது என்ற அக்கறை 'மாதர்சங்கம் எங்கே போனது?' என்ற கேள்வியில் வெளிப்படவில்லை.

  நிற்க.... நாச்சியார் டீசர் பிரச்சினைக்கு வருவோம். தே.. வார்த்தை பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தை. இதன் பூர்வாங்கத்தை பார்த்தால் ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம்.

  அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது.

  குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீசரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து ஒரு அதிர்வை ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனை தமிழ் சினிமா படைப்பாளிகள் கடைபிடிப்பது தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானது," என்கிறார் உ.வாசுகி

  English summary
  All India Democratic Women Association has condemned Bala's Naachiyaar teaser
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X