»   »  அனைத்து பெண்களும் சன்னி போன்று ஆண்களுக்கு இன்பம் தரட்டும்: இயக்குனர் மகளிர் தின வாழ்த்து

அனைத்து பெண்களும் சன்னி போன்று ஆண்களுக்கு இன்பம் தரட்டும்: இயக்குனர் மகளிர் தின வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என இயக்குனர் ராம் கோபால் வர்மா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மகளிர் தின வாழ்த்துக்களாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பெண்கள்

ஆண்கள் தினம் இல்லையா? ஆண்டின் அனைத்து தினங்களும் ஆண்களுக்கும், ஒரேயொரு நாள் பெண்களுக்கா?

ஆண்கள் தினம்

மகளிர் தினத்தை ஆண்கள் தினம் என்று அழைக்க வேண்டும் ஏனென்றால் பெண்களை சக பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் அதிகமாக கொண்டாடுகிறார்கள்.

வாழ்த்து

அனைத்து ஆண்களின் சார்பில் பெண்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னி லியோன்

உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'I wish all the women in the world give men as much happiness as Sunny Leone gives'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil