Pollachi- பெண்கள் சேர்ந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்லணும்: குமுறும் இயக்குநர்
Recommended Video

சென்னை: பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும் என்று பொள்ளாச்சி விவகாரம் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அடங்காதே புகழ் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
அமுதன்
இளம் பெண்ணை காமக்கொடூரன்கள் சேர்ந்து சீரழித்தபோது எடுத்த வீடியோவில் அந்த பெண் கெஞ்சிக் கதறினார். அந்த குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் ட்வீட் செய்துள்ளார். #ArrestPollachiRapists
ரீட்வீட்
பொள்ளாச்சி கொடூரம் குறித்து ட்வீட் செய்ததுடன் வேறு ஒருவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் அமுதன்.
மிருகங்கள்
பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும்...!!
இந்த நாய்களுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தோலை உரிக்க வேண்டும்...!!
#arrestpollachirapists என்று இயக்குநர் சண்முகம் முத்துசாமி குமுறியுள்ளார்.
தண்டனை
பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மிருகங்களை தண்டிக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் திரு.


Click it and Unblock the Notifications











