'வாடி ராசாத்தீ-ன்னு கொண்டாடின வாய்களை போம்மா ராசாத்தீன்னு சொல்ல வச்சிட்டீங்களே!'
Recommended Video

வலையுலகில் இன்றை பரபரப்பு டாபிக் நாச்சியார் டீசரை உருவாக்கிய பாலாவும் , தே... பயலுக வசனத்தை உச்சரித்த ஜோதிகாவும்தான்.
அது எப்படி அந்த வார்த்தையை ஜோதிகா உச்சரிக்கலாம்? இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவர், என்னதான் சினிமாவாகவே இருந்தாலும் இப்படிப்பட்ட வார்ததையைப் பேசலாமா?

ஒரு பெண்ணே இன்னொரு தாயை அவமதிக்கும் செயலல்லவா... இதற்கு எப்படி சென்சாரில் அனுமதி அளித்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு முன் பல படங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாயகன் படத்தில் கமல் ஹாஸன் இதே வார்த்தையை உச்சரித்தபோது பலருக்கும் ஷாக். ஆனால் தணிக்கைத் துறை காட்சியின் தன்மை கருதி அனுமதித்தது. இன்னொன்று அது ஹீரோ உச்சரித்தது.
ஆனால் இதில் பெண்ணே இன்னொரு பெண்ணை தே...யா என்று திட்டுவதை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.
ஜோதிகா 12 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தில் நடிக்க வந்தபோது, அவரை வாடி ராசாத்தீ என மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் தாய்மார்கள். அடுத்து அவர் நடித்த மகளிர் மட்டும் படத்துக்கும் பெண்கள் ஆதரவு கிடைத்தது. இப்போது நாச்சியார் படத்தில் அவர் பாத்திரம் என்னவாக இருந்தாலும், இந்த தே..யா பயலுங்க டயலாக்கால் பெண்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார். வாடி ராசாத்தீ என கொண்டாடிய வாய்கள் இப்போது, போதும் போம்மா ராசாத்தீ என்று கூறும் அளவுக்குப் போய்விட்டது.
இந்த வசனத்துக்கு சூர்யாவும், சிவகுமார் குடும்பமும் எப்படிச் சம்மதித்தனர் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications











