2 வருஷம் தான் அப்புறம் மாட்டேன்: ஜெய் ஹீரோயின் பேட்டி
Recommended Video

சென்னை: இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ஜெய் பட நாயகி ரெபா மோனிகா ஜான்.
கேரளாவை சேர்ந்தவர் ரெபா மோனிகா ஜான். மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேலின் கசின்.
அவர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்கமாகியுள்ளார். அந்த படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த பிச்சுமணி இயக்குகிறார்.

ரெபா
ஜெய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனக்கும், ஜெய்க்கும் இடையே பெரிதான ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் இல்லை. ஹாலிவுட் சேஸ் படங்கள் போன்றது இது என்கிறார் ரெபா.

கதாபாத்திரம்
மலையாளத்தில் இளம் படக்குழுவுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அந்த படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. கொச்சியில் உள்ள தீவு ஒன்றில் ஷூட்டிங் நடந்தது என்று ரெபா தெரிவித்துள்ளார்.

படம்
படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் தன்னை தேடி வந்த பல பட வாய்ப்புகளை ஏற்க மறுத்திருக்கிறார் ரெபா. தற்போது படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்துள்ளார்.

2 ஆண்டுகள்
நான் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடிப்பேன். அதன் பிறகு மீண்டும் படிப்பை தொடர திட்டமிட்டுள்ளேன். ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை என்கிறார் ரெபா.


Click it and Unblock the Notifications











