twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நிற புடவை கொடுத்து... மிஷ்கின்

    By Siva
    |

    Mysskin
    இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

    நந்தா பெரியசாமி இயக்கிய அழகன் அழகி படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது, என் நண்பன் பாலாஜி சக்திவேல் எடுத்த படம் வழக்கு எண் 18/9. நான் காரைக்காலில் ஷூட்டிங்கில் இருந்தபோது அந்த படத்தைப் பற்றித் தான் அடிக்கடி கேட்பேன். சென்னைக்கு வந்ததும் முதல் வேளையாக பாலாஜிக்கு போன் செய்து படம் எப்படி ஓடுகிறது என்றேன். அதற்கு அவனோ ஓ.கே. என்றான்.

    ஒரு கலைஞன் ஓகே என்றால் அவனது படைப்பை மக்கள் ஆதரிக்கவில்லை என்று தான் அர்த்தம். பாலாஜி சக்திவேல் எடுத்த காதல் படத்தை விட வழக்கு எண் 18/9 மிகவும் சிறப்பானது. பாலாஜி 2 ஆண்டுகளாக செதுக்கி செதுக்கி எடுத்த படத்தை தமிழக மக்கள் ஏன் கொண்டாடாமல் போனார்கள். அந்த படத்தை என்னிடம் கொடுத்திருந்தால் ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நிற புடவை கொடுத்து 'வாலமீனு வெளாங்கு மீனு' என்று பாடச் சொல்லி ஹிட்டாக்கியிருப்பேன்.

    ஆனால் பாலாஜியின் கண்ணியமான படத்திற்கு அங்கீகாரம் இல்லை. அப்ப எப்படித் தான் படம் எடுக்க வேண்டும்?. கையெடுத்து கும்பிடுகிறேன் திரைத்துறையில் 2,3 காந்திகள் தான் உள்ளனர். அவர்களையும் சுட்டு விடாதீர்கள். அவர்கள் மறைவிற்கு பிறகு பாராட்டியோ, சிலை வைத்தோ புண்ணியம் இல்லை.

    இனி நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றார்.

    மிஷ்கின் தான் இயக்கிய நந்தலாலா படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Mysskin announced at a function that he won't act as hero again and he doesn't want fans club. He felt sorry for his friend director Balaji Sakthivel as his movie Vazhakku En 18/9 is not received well by the public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X