Just In
- 32 min ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 57 min ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
- 1 hr ago
கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி!
- 2 hrs ago
பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
Don't Miss!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Finance
80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..!
- News
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..!
- Automobiles
நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி

சென்னை: நயன்தாரா விஷயத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
எனக்கு இன்னொரு முகம் இருக்கு குறும்பட விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். படம் பற்றி பேசிய அவர் நயன்தாரா விவகாரம் குறித்தும் பேசினார்.
அது குறித்து அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். தடவியதில் என்ன தப்பு, நான் சொல்லிக்காட்டியதில் என்ன தப்பு?: கஸ்தூரி

இயக்குநர்
நான் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. பயம் என்பது எங்கள் குடும்பத்திலேயே யாருக்கும் கிடையாது.

உண்மை
இன்று என் பேச்சை கேட்டு மீடியாவும், பார்வையாளர்களும் கை தட்டுகிறார்கள். கொலையுதிர்காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் அப்படித் தான் நடந்தது. உண்மையை சொன்னால் ஆதரிக்கிறார்கள். நான் இனி படங்களில் நடிக்க முடியாது என்றார்கள். படம் இல்லை என்றால் நாடகங்கள், டிவி சீரியல்களில் நடிப்பேன். நான் நடித்துக் கொண்டே இருப்பேன்.

முடியாது
அதிகமாக பேசினால் தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எல்லாம் நான் கேட்க மாட்டேன். நான் அப்ப பேசினதுக்கே சொன்னேன், யாராவது மனவருத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மனவருத்தப்பட்டேன் என்று சொல்லச் சொன்னேன். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எதுக்கு மன்னிப்பு கேட்கணும். என்ன கொலை குற்றமா பண்ணிட்டேன்?

சந்தை
இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நான் பேசுவதில் உண்மை இருக்கா, இல்லையா?. உண்மை இருந்தால் ஏத்துக்கோ, இல்லை என்றால் விட்டுடு என்றேன். ஏனென்றால் இது சந்தை. சந்தையில் பாகற்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய் விற்கும். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்ல உனக்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ. நான் நிறைய பேசுகிறேன் என்றால் நான் நிறைய படிப்பேன் என்றார் ராதாரவி.