»   »  கமல் ஹாஸனின் பிக் பாஸுக்கு கூப்பிட்டாலும் போக மாட்டேன்: மாதவன்

கமல் ஹாஸனின் பிக் பாஸுக்கு கூப்பிட்டாலும் போக மாட்டேன்: மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் நடத்த உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் ஏற்க மாட்டேன் என மாதவன் தெரிவித்துள்ளார்.

மாதவன், விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் மாதவனுக்கு இருக்கும் கிரேஸ் அப்படியே உள்ளது.

இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தது சிறந்த அனுபவம். அவர் அருமையான நடிகர். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர வேண்டும் என பார்த்து பார்த்து நாங்கள் நடித்தோம்.

விளம்பரம்

விளம்பரம்

நான் விளம்பரம் தேட எதையும் சொல்ல மாட்டேன். நான் ஒரு பொறுப்புள்ள குடிமகன் இனியும் அப்படி தான் இருப்பேன். நான் கடினமாக உழைத்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளார். அதில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் ஏற்க மாட்டேன். அது எனக்கு சரிப்பட்டு வராது.

தீபிகா

தீபிகா

நான் கதை கேட்கும்போது எனக்கு ஜோடி யார் என்று கேட்க மாட்டேன். அதற்கு பதிலாக கதாபாத்திரங்கள், தயாரிப்பாளர்கள் பற்றி கேட்பேன். தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். கமல், அமிதாப் பச்சன் எப்பொழுது அழைத்தாலும் உடனே வருவேன் என்றார் மாதவன்.

English summary
Madhavan said that he won't be a part of Kamal Haasan's Big Boss as it is not his cup of tea.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil