twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோர்ட்டிற்கு சென்ற த்ரிஷ்யம் 2 விவகாரம்... இந்தி ரீமேக் இப்போதைக்கு இல்லை

    |

    மும்பை : மலையாளத்தில் மோகன்லால் நடித்து, கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட படம் தான் த்ரிஷ்யம் 2. இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை பனோகரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் பெற்றதாக கூறப்பட்டது.

    Wont commence Drishyam 2 shooting, production house tells HC

    இந்நிலையில் கடந்த வாரம் மும்பை ஐகோர்ட்டை அனுகி உள்ள 18 மீடியாக பிரைவேட் லிமிடெட் நிறுவனம், த்ரிஷ்யம் படத்தின் எந்த பாகத்தையும் பனோரமா நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுள்ளது.

    தாங்கள் தான் படத்தின் ரீமேக் உள்ளிட்ட உரிமங்களை பெற்றுள்ளதாக வியாகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியாகம் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட், த்ரிஷ்யம் படத்தின் எந்த பாகத்தையும் பனோரமாவோ அல்லது வேறு எந்த நிறுவனமோ தயாரிக்கும் பணிகளை துவக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    சூர்யாவுக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. 'காவல்துறை உங்கள் நண்பன்' இயக்குநர் பளீச்! சூர்யாவுக்கு தீனி போடுற மாதிரி ஸ்க்ரிப்ட் இருக்கு.. 'காவல்துறை உங்கள் நண்பன்' இயக்குநர் பளீச்!

    இதனை ஏற்ற பனோரமா நிறுவனமும், த்ரிஷ்யம் 2 உரிமம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வரும் வரை படத்தின் சூட்டிங்கை துவங்க போவதில்லை என தெரிவித்துள்ளது. இந்த படம் தொடர்பாக திரைக்கதை அமைத்தல், வசனம் தயாரித்தல் போன்ற எந்த பணியையும் துவக்க கூடாது என்ற கோர்ட்டின் அறிவுறுத்தலையும் பனோரமா நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 18 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    வியாகம் நிறுவனம் தான் த்ரிஷ்யம் படத்தின் கதையை தழுவி, புதிய படங்களை தயாரிப்பதற்கான காப்புரிமத்தை வைட் ஆங்கிள் கிரியேஷ்ன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்தது பெற்றிருந்தது. ரீமேக் உரிமத்திற்காக ஒப்பந்தமும் போட்டிருந்தது.

    English summary
    Panorama Studios International assured Bombay High Court it would not begin shooting till the copyright suit filed against it is pending
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X