என்னது, விஜய் டிவி கையை விட்டு போகும் 'பிக் பாஸ்'?
Recommended Video

சென்னை: விஜய் டிவி கையைவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி போய்விடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தமிழிலும் அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் நிகழ்ச்சிக்கும், அதை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாஸனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை துப்பித் துப்பி விமர்சனம் செய்தனர். பின்னர் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களாகிவிட்டனர்.

தமிழ்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கினாலும் டிஆர்பி எகிறியது. இந்நிலையில் ஜூன் மாதம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

கலர்ஸ்
இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் டிவி ஒளிபரப்பு செய்கிறது. கடந்த ஆண்டு தமிழ் பிக் பாஸை அறிமுகம் செய்து வைத்தபோது விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள்.

ஆர்யா
கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனல் இல்லை. ஆனால் இந்த மாதம் கலர்ஸ் தமிழ் சேனலை துவங்கிவிட்டனர். ஏற்கனவே ஆர்யாவை வைத்து அவருக்கு பெண் தேடும் நிகழ்ச்சியை துவங்கி ரசிகைகளின் வரவேற்பை கொத்தாக அள்ளிவிட்டனர்.

ரியாலிட்டி ஷோ
கலர்ஸ் தமிழ் சேனல் வந்துவிட்டதால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும்பாலும் அந்த சேனலில் தான் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. விஜய் டிவி கையை விட்டு போகிறதா பிக் பாஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர்கள்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொட்டிக் கொடுக்கிறது கலர்ஸ். கமல் அரசியலுக்கு சென்றுவிட்டதால் நிச்சயம் பெரிய நடிகரை பிடித்து நிகழ்ச்சியை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











