என்ன மின்னல பிடிச்சுகிட்டு ஸ்பைடர் மேன் போல தாவுறாங்க.. வெளியானது வொண்டர் வுமன் 1984 ட்ரைலர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பேட்மேன் ட்ரைலரை தொடர்ந்து வொண்டர் வுமன் 1984 பட ட்ரைலரும் வெளியாகி உள்ளது.
பேட்மேன் ட்ரைலர், பிளாக் ஆடம் மோஷன் டீசர், சூசைட் ஸ்குவாட் கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் தற்போது வொண்டர் வுமன் டிரைலர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு டிசி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.
மார்வெல் ரசிகர்களுக்கும், டிசி ரசிகர்களுக்கும் இடையே தனியாக சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் சண்டைகளும் நடந்து வருகின்றன.

வொண்டர் வுமன் 1984 ட்ரைலர்
இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் கால் கடோட், கிறிஸ் பைன், கிறிஸ்டன் விக் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி உள்ள வொண்டர் வுமன் 1984 படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிசி ஃபேண்டோம் நிகழ்ச்சியில், தொடர்ந்து பேட்மேன் ட்ரைலர், பிளாக் ஆடம், சூசைட் ஸ்குவாட், வொண்டர் வுமன் என பல அறிவிப்புகள் வெளியாகி டிசி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

மின்னலை பிடித்து
சிலந்தி வலைகளை விட்டு, பில்டிங்குக்கு பில்டிங் தாவும் ஸ்பைடர்மேனை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வானில் தோன்றும் மின்னல்களை, தனது சாட்டையால் பிடித்து, பிடித்து விண்ணுக்கு செல்லும் காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் தான். கால் கடோட் நடிப்பில் ஏற்கனவே வெளியான வொண்டர் வுமன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பெண் சிறுத்தை
இந்த படத்தில் நாயகி கால் கடோட்டுக்கு வில்லியாக பெண் சிறுத்தை கதாபாத்திரத்தில் பிரபல ஹால்வுட் நடிகை கிறிஸ்டன் விக் நடித்துள்ளார். கோஸ்ட் பஸ்டர்ஸ், மார்ஷியன், பிரைட்ஸ்மெய்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், இந்த 2 நிமிட ட்ரைலரில் நம்ம வொண்டர் வுமனையே புரட்டி எடுக்கிறார்.

மார்வெல் vs டிசி
டிசி மற்றும் வார்னர் பிராஸ் இணைந்து தொடர்ந்து அதிரடி அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், #Marvel என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி மார்வெல் மற்றும் டிசி ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர். மேலும், மார்வெல் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர்மேன், பிளாக் விடோ உள்ளிட்ட படங்களின் போஸ்டர்களை போட்டு ட்ரெண்ட் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











