Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியன் சூப்பர் ஹீரோவுக்கு நன்றி சொன்ன வொண்டர் வுமன்.. படத்தை பார்த்து அப்படி பாராட்டியிருக்காரே!
மும்பை: வொண்டர் வுமன் நடிகை கேல் கடோட் ஹிரித்திக் ரோஷனுக்கு நன்றி கூறியுள்ளது பாலிவுட் திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சமீபத்தில் ரிலீசான வொண்டர் வுமன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், அந்த படத்தை புகழ்ந்து ட்வீட் பண்ணி இருந்தார்.
யார ஹீரோவாக்கணும்.. எப்படி வில்லனாக்கணும்.. எப்போ ஜோக்கராக்கணும்னு பிக் பாஸுக்கு நல்லாவே தெரியும்!
அதை பார்த்த ஹாலிவுட் நடிகையான கேல் கடோட், ஹிரித்திக்கிற்கு நன்றி சொல்லி ட்வீட் செய்திருப்பது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

வொண்டர் வுமன் 1984
வொண்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகமான வொண்டர் வுமன் 1984 திரைப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகி உள்ளது. இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வெளியான முதல் பாகம் உலகளவில் வசூல் மழையை குவித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

ஐமேக்ஸில் ஹிரித்திக்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐமேக்ஸ் திரையரங்கில் வொண்டர் வுமன் படத்தை நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது குடும்பத்துடன் மாஸ்க் அணிந்து கொண்டு பார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து பதிவிட்டு இருந்தார்.

வொண்டர் வுமனுக்கு பாராட்டு
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் சைல்ட்வுட் க்ரஷ் வொண்டர் வுமன் தானாம். நடிகை கேல் கடோட் நடிப்பில் வெளியாகி உள்ள வொண்டர் வுமன் 1984 படத்தை பார்த்த ஹிரித்திக் ரோஷன், ஹாலிவுட் நடிகை கேல் கடோட்டிற்கும் அவரது அற்புதமான டீமுக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

ஹிரித்திக் ரோஷனுக்கு நன்றி
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் போட்ட பாராட்டு ட்வீட்டை பார்த்ததும் ஹாலிவுட் நடிகையான கேல் கடோட், நீங்க இந்த படத்தை பார்த்து மகிழ்ந்ததில் ரொம்ப சந்தோஷம், பாராட்டியதற்கு நன்றி, உங்கள் ஹாலிடேவை உற்சாகமாக கொண்டாட வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருப்பது ஒட்டுமொத்த சினிமா உலகின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தியன் சூப்பர் ஹீரோ
இந்தியன் சூப்பர் ஹீரோவாக க்ரிஷ் படத்தில் நடித்த ஹிரித்திக் ரோஷனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிரித்திக் ரோஷன் இந்தியாவின் ஹேண்ட்ஸம் ஹங்க் என்பது ஹாலிவுட் நடிகைகளுக்கு மட்டும் என்ன தெரிந்திருக்காதா? என ஏகபப்ட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.