விவேக்கின் மறைவை நம்ப முடியவில்லை... அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்த நயன்தாரா
சென்னை : நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் தங்களின் அதிர்ச்சி கலந்த, இரங்கலை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
பலரும் பல விதங்களில் தங்களின் வேதனைகளையும், விவேக் உடனான தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் ட்விட்டர் பக்கத்தில் விவேக் உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் ஓராண்டிற்கும் மேலாக விவேக்குடன் பணியாற்றிய அனுபவத்தையும், விவேக்கின் திடீர் மறைவு குறைத்தும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.
அவர் தனது பதிவில், ஓராண்டு அவருடன் பணியாற்றி போது எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக விஸ்வாசம் படத்தில் அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது.
சீக்கிரமே சென்று விட்டார். நம்ப முடியவில்லை. கணிக்க முடியாத வாழ்க்கை என்பதை காட்டுகிறது. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அவர்களுக்கு இறைவன் அளிக்க வேண்டும். இவ்வாறு நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
டைரக்டர் விக்னேஷ் சிவனும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், விவேக் இருப்பது போன்ற ஒரு அழகிய ஓவியத்தை பதிவிட்டு, தனது இரங்கலை பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











