யாருடா நீங்களாம்.. போடாத படத்துக்கு ஹவுஸ்ஃபுல்.. ஜெயிலரை வச்சு செய்த உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை உட்லண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடவே இல்லை என்றும் ஆனால், பாக்ஸ் ஆபிஸ் டிராக்டர்கள் எனும் பெயரில் சுற்றிக் கொண்டு திரியும் சிலர் தன்னிடமே உங்க தியேட்டரில் ஜெயிலர் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுவதாக கூறினர் என உண்மையை உடைத்து பங்கம் பண்ணியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை முறி அடித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை மனோபாலா விஜயபாலன் போட்ட ட்வீட்டைவைத்து 700 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

Woodlands theater owner slams fake box office trackers and indirectly reveals about Jailer too

உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர்: அதே நேரம், 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ திரைப்படத்தின் வசூல் போலி என்றும் எந்த தியேட்டரிலும் படம் ஓடவே இல்லை என்றும் சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் லியோ படத்தை தூக்கிவிட்டு எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை போட்டுள்ளதாக ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், உட்லண்ட்ஸ் திரையரங்கில் இதுவரை வெளியான மற்ற படங்களை விட அதிக வசூலை இரண்டு வாரத்திலேயே நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஈட்டியதாக சீக்கிரம் எடு அந்த தியேட்டர் ஓனர் அறிவித்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் ஓனர்கள் உடன் இணைந்து கொண்டு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் தொடர்பான விஷயத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த படத்தை போடவே இல்லை: உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் பேசும்போது, பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் என சொல்லிக் கொண்டு வெறுப்புணர்வை அதிகம் பரப்பி வரும் ரமேஷ் பாலா மற்றும் மனோபாலா இருவரையும் வச்சு செய்துள்ளார்.

தனது தியேட்டரில் ஆகஸ்ட் மாதம் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் படத்தை போடவே இல்லை என்றும் தன்னிடமே வந்து உங்க தியேட்டர்ல அந்த படம் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடுகிறது என்றும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்றும் கதை அளந்து விடுகின்றனர். இதுதான் டிராக்கில் உண்மைத்தன்மை என விளாசி உள்ளார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானதை தான் மறைமுகமாக உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் தனது பேட்டியில் கூறியுள்ளதாக விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X