For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ஜெய்யிடம் அதை நான் எதிர்பார்க்கவில்லை.. நடிகை வாணி போஜன் 'ட்ரிபிள்ஸ்' பேட்டி!

    By
    |

    சென்னை: நடிகர் ஜெய்யிடம் அதை நான் எதிர்பாக்கவில்லை என்று நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

    ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் இணைய தொடர், ட்ரிப்ள்ஸ்.

    இதில் நடிகர் ஜெய், வாணி போஜன், மாதுரி, ராஜ்குமார், விவேக் பிரசன்னா, வெங்கடேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    பஞ்சமில்லா காமெடி

    பஞ்சமில்லா காமெடி

    சாருகேஷ் இயக்கியுள்ள இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இத்தொடரின் காதல் பாடல் வெளியானது. கலகலப்புக்கு பஞ்சமில்லாத காமெடி தொடரான இது, வரும் 11 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இதில் நடித்தவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

    கிரேஸி சாயல்

    கிரேஸி சாயல்

    ஸ்டோன் பெஞ்ச் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, நாம் கிரேஸி மோகனின் ரசிகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு திரைக்கதை எழுதியுள்ள பாலாஜியின் திரைக்கதையில் அவர் சாயல் அட்டகாசமாக விரவி இருக்கிறது. நாங்கள் கிரேஸி மோகன் நினைவை போற்றும் வகையில் இந்த தொடரை அவருக்கு சமர்ப்பிக்கிறோம் என்றார்.

    திறமையான இயக்குநர்

    திறமையான இயக்குநர்

    நடிகர் ஜெய் கூறும்போது, இந்த தொடரின் படப்பிடிப்பு ஒரு சினிமா எடுப்பதை விட கச்சிதமாக இருந்தது. இயக்குநர் சாருகேஷ் திறமை வாய்ந்த இயக்குநர். காதல் மற்றும் காமெடி காட்சிகளை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் என்றார்.

    எளிமை ஜெய்

    எளிமை ஜெய்

    நடிகை வாணி போஜன், கூறும் போது, ஜெய்யுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. மிகச் சிறந்த நண்பராக அவர் பழகுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. எளிமையான அவரது இயல்பு படப்பிடிப்பில் எனக்கு உதவியாக இருந்தது. ட்ரிபிள்ஸ் மாதிரியான இணைய தொடரில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்கு சிறப்பானது என்றார்.

    English summary
    Hotstar's latest series, Triples. Charukesh director it and Jai, Vani bhojan, Mathuri has acted this series. Vani says, 'working with jai has been a great experience'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X