twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னைக்கு உலக பிரியாணி தினமாம்.. மாநகரம் முதல் விக்ரம் வரை லோகேஷ் வைத்த பிரியாணி சீன்ஸ் இதோ!

    |

    சென்னை: பிரியாணியை ஓவர்ரேட்டட் உணவு என்று சொன்னாலும், இந்தியாவில் தினமும் அதிகம் விற்பனையாகப்படும் உணவு என்றால் அது பிரியாணி தான்.

    குஸ்கா, முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீஃப் பிரியாணி, வான்கோழி பிரியாணி, ஒட்டக பிரியாணி என பிரியாணியின் வெரைட்டிகள் நீண்டு கொண்டே போகின்றன.

    சன்டே அதுவுமா உலக பிரியாணி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வைத்துள்ள நாக்கில் எச்சில் ஊறும் பிரியாணி காட்சிகள் குறித்து இங்கே பார்ப்போம்.

     மீனாவின் திருமண நாள் பதிவு.. பரிதவிப்பில் குடும்பம்.. கவலையில் ரசிகர்கள்! மீனாவின் திருமண நாள் பதிவு.. பரிதவிப்பில் குடும்பம்.. கவலையில் ரசிகர்கள்!

    உலக பிரியாணி தினம்

    உலக பிரியாணி தினம்

    உலக பிரியாணி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சோஷியல் மீடியாவை திறந்தாலே ஒரே பிரியாணி போஸ்ட்டுகளாக போட்டு மதிய நேரத்தில் பசியை கிளறி விடுகின்றனர். ஆறு படத்தில் ஜோதிகா திருட்டுத்தனமாக சாப்பிடும் கோழி பிரியாணி முதல் விவேக் காமெடியாக சொல்லும் காக்கா பிரியாணி வரை ஏகப்பட்ட திரைப்படங்களில் பிரியாணி காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், லோகேஷ் கனகராஜ் தான் தனது படங்களில் அதற்காக தனிக் காட்சிகளை வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

    மாநகரம் படத்தில் முட்டை பிரியாணி

    மாநகரம் படத்தில் முட்டை பிரியாணி

    சிறுவனை கடத்தி வைத்திருக்கும் முனிஷ்காந்த், உனக்கு தயிர் சாதம் தான் வாங்கிட்டு வர சொன்னாங்க, நான் தான் உனக்கு ஸ்பெஷலா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.. முட்டை பிரியாணி, அதிலும் ரெண்டு முட்டை இருக்கு என சொல்லி சிறுவனுக்கு கொடுத்து, தான் மட்டும் அந்த கடத்தலில் இருந்து எஸ்கேப் ஆகப் பார்ப்பார். ஆனால், பிரியாணி சாப்பிட்டாலும், நீ தான் சோறு வாங்கி கொடுத்தேன்னு உன்னையும் காட்டிக் கொடுப்பேன் என சொல்லி சிறுவன் ஸ்கோர் செய்வார்.

    கைதி பிரியாணி சீன்

    கைதி பிரியாணி சீன்

    மாநகரம் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் என எதையுமே வைக்கவில்லை என்றாலும், தனக்கு ரொம்பவே பிடித்த பிரியாணிக்காக ஸ்பெஷல் சீனையே வைத்திருப்பார். பிரியாணி மூடியை எடுத்து அதில், பிரியாணியை ஒரு வாலி நிறைய அள்ளிப் போட்டு எலும்பை கடித்து கார்த்தி சாப்பிடும் அந்த காட்சியை பார்த்தாலே பிரியாணியை பிடிக்காதவர்களும், அதை ருசித்து பார்த்து விட வேண்டும் என ஏங்குவார்கள்.

    மாஸ்டரில் லெக் பீஸ் சண்டை

    மாஸ்டரில் லெக் பீஸ் சண்டை

    விஜய்யின் மாஸ்டர் படத்திலும் உருக்கமான ஒரு பிரியாணி காட்சியை வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வில்லன் பவானி சிறுவர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். அந்த பிரியாணியை சாப்பிட்டு, அதில் உள்ள லெக் பீஸில் உள்ள சதையெல்லாம் கடித்து தின்னுவிட்டு அந்த எலும்பையே ஆயுதமாக மாற்றி அந்த சிறுவன் விஜய்சேதுபதிக்கு எதிராக சண்டை போடும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்.

    Recommended Video

    Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil
    விக்ரமில் பிரியாணி விருந்து

    விக்ரமில் பிரியாணி விருந்து

    விக்ரம் டீசரிலேயே மட்டன் பிரியாணிக்கு ஒரு ஷாட் வைத்திருந்ததை பார்த்து, இந்த படத்திலும் மனுஷன் பிரியாணியை விடலைன்னு பார்த்தால், யூடியூபில் பிரபலமானவர்களை வைத்து ஒரு தனி பிரியாணி விருந்தே வைத்து ஒரு புடி புடிக்க வைத்திருப்பார். தளபதி 67 படத்தில் அடுத்து என்ன மாதிரியான பிரியாணி சீனை லோகேஷ் கனகராஜ் வைக்கப் போகிறார் என்கிற ஆவல் தான் படத்தின் கதையை விட அதிகமாக பிரியாணி ரசிகர்கள் மத்தியில் நிறைந்துள்ளது.

    English summary
    World Biryani Day: Lokesh Kanagaraj’s Maanagaram, Kaithi, Master and Vikram movies contains Biryani scenes. The Director himself is a hardcore Biryani lover.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X