வேட்டியில் யார் கெத்து?: தலயா, தளபதியா, தலைவரா? #வேட்டிதினம்
சென்னை: நடிகர்களில் யாருக்கு வேட்டி அம்சமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.
இன்று சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் வேட்டி கட்டி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். என்ன தான் ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் போட்டாலும் வேட்டி கட்டும் போது ஆண்கள் தனி அழகு.
யார் வேட்டி கட்டினாலும் அம்சமாக இருக்கும். அது தான் வேட்டியின் சிறப்பு.
அஜித்
நடிகர்கள் பேண்ட், சட்டை போட்டு நடித்தாலும் வேட்டி கட்டும்போது மாஸாக இருப்பார்கள். விஸ்வாசம் படத்தில் அஜித் வேட்டி சட்டையில் கம்பீரமாக இருக்கிறார். அஜித்துக்கு வேட்டி எப்பொழுதுமே கூடுதல் அழகு.

ரஜினி
ரஜினிகாந்த் பல காலம் கழித்து பேட்ட படத்தில் குறும்புத்தனத்துடன் மாஸாக நடித்துள்ளார். அதில் அவர் வேட்டி கட்டி வரும் புகைப்படம் வெளியானது. வேட்டி, சட்டையில் ரஜினி கெத்தாக இருந்தார்.

விஜய்
விஜய் பல படங்களில் வேட்டி, சட்டை அணிந்து நடித்துள்ளார். மெர்சல் படத்தில் விஜய் வேட்டி கட்டி விமான நிலையத்தில் நடந்து வந்த காட்சி மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்
சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம், கமல் என்று அனைத்து நடிகர்களுமே வேட்டி, சட்டையில் அம்சமாக இருப்பார்கள். எந்த நடிகருக்கு வேட்டி, சட்டை பொருத்தமாக உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.


Click it and Unblock the Notifications











