முத்தல்ல ஐஸ், பிறகு இசபெல், நேத்து கேத்தரின், இன்னைக்கு..? இது ஃபேமஸ் லவ்வர் ஸ்டைல்!
ஐதராபாத்: நடிகை விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படுகிறது.
'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து வரும் தெலுங்கு படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். இதில் நான்கு கெட்டப்பில் வருகிறார் அவர். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

கிராந்தி மாதவ் இயக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கிடையே, இதன் பர்ஸ்ட் லுக்கை வித்தியாசமாக வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹீரோயின் லுக்கை வெளியிட்டு வருகின்றனர். முதல் நாள் ஐஸ்வர்யா ராஜேஷ் லுக்கை வெளியிட்டனர். அதில் விஜய் தேவரகொண்டா மனைவியாக ஐஸ்வர்யா நடிக்கிறார் என்று தெரிய வந்தது.
அடுத்து, இஸ்பெல்லுடன் விஜய் நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. கேத்தரின் தெரசாவுடன் விஜய் தேவரகொண்டா வருவது போலான போஸ்டர் நேற்று வெளியானது.
போஸ்டரை பார்த்தால் விஜய், தொழிற்சங்க தலைவர் போலவும் கேத்தரின் முதலாளி போலவும் தெரிகிறது.
இந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை தெரிவித்துள்ளனர். ஏராளமான லைக்குகளும் குவிந்துவருகிறது.
அடுத்து ராஷிகண்ணா- விஜய் தேவரகொண்டா ஜோடியின் லுக், இன்று வெளிவருகிறது. இந்த போஸ்டரை தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கேத்தரின் தெரசா தமிழில், மெட்ராஸ், கதகளி, கணிதன், வந்தா ராஜாவாதான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











