வல்கர் காட்சி, வரைமுறையில்லா வசனம்... வேர்ல்ட் பேமஸ் லவ்வர் தமிழ் டீசரில் அதை மாற்றினாங்களாமே?
ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் பட தமிழ் டீசரில், வல்கரான வசனத்தை படக்குழு நீக்கியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.
தெலுங்கு, தமிழில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நான்கு கெட்டப்பில் வருகிறார் விஜய் தேவரகொண்டா.

ஐஸ்வர்யா ராஜேஷ்
அவருக்கு ஜோடியாக, 4 ஹீரோயின்கள். நடிகைகள் ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கிராந்தி மாதவ் இயக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

போஸ்டர்கள்
இதன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹீரோயின் லுக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஒவ்வொரு லுக்கிலும் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இருந்தார். ரசிகர்களிடம் அந்த போஸ்டர்கள் வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

அர்ஜூன் ரெட்டி
இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த டீசர் வெளியானது. இந்த டிரைலர் அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில், தெலுங்கு டீசர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

வல்கர் வசனங்கள்
அதில், சில வல்கரான, வெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம். தமிழ் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்குள்ள டீசரில் அதை மாற்றி வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியும் வசனமும் இடம்பெற்றால் தேவையில்லாத நெகட்டிவ் பப்ளிசிட்டி படத்துக்கு கிடைக்கும் என்பதால் இதனால் பிசினஸ் பாதிக்கலாம் என்றும் அதை நீக்கியதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











